White House Christmas Event: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. அமெரிக்க அதிபரை திட்டிய நபரால் பரபரப்பு! தொல்லை தரும் அந்த வார்த்தை!
அப்போது, அதிபரிடம் பேசிய ஜாரெட், அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்..... நீங்கள் அற்புதமாக இந்த பண்டிகையை கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்... 'லெட்ஸ் கோ பிரான்டன்' (Let's Go Brandon) என்றார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டுகிறது. இந்த பண்டிகையையொட்டி அமெரிக்கா அதிபர் நாட்டு மக்களிடம் தொலைபேசியில் உரையாற்றினார். அப்போது,டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் ஜோ பைடனை சிறுமைப்படுத்தும் விதமாக தகாத வார்த்தையை பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், கிறித்தவ பண்டிகைக்கும் முந்தைய நாளில், சான்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உலாவைக் தெற்கு அமெரிக்காவின் விமானப்படை தளம் கண்காணித்து வருகிறது.ஆண்டுதோறும், கிறித்தவ பண்டிகையின் போது அமெரிக்க அதிபர் அவரின் மனைவி ஆகியோர் வெள்ளை மாளிகையில் இருந்துகொண்டு, சான்டா கிளாஸ் இருப்பிடம் குறித்த குழந்தைகளின் கேள்விக்குப் பதிலளிப்பார். இது, கிறித்தவ பண்டிகையின் மரபாக அந்நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில், இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி குழந்தைகளிடம் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினர். அப்போது, ஜாரெட் குடும்பத்தினர் அதிபரிடம் பேசத் தொடங்கினார். இதை ஆர்வமாக கேட்ட பைடன், " அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்று கேட்டார். குடும்பத்தில் உள்ள நான்கு குழந்தைகளும் தங்களுக்கு கிறிஸ்துமஸ் தினப் பரிசுகளை பற்றி மகிழ்ச்சியுடன் விவரித்தனர்.
அப்போது, அதிபரிடம் பேசிய ஜாரெட், அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்..... நீங்கள் அற்புதமாக இந்த பண்டிகையை கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்... 'லெட்ஸ் கோ பிரான்டன்' (Let's Go Brandon) என்று கூறினார்.
Let's Go Brandon என்பது ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடனை சிறுமைபடுத்துவதற்காக பயன்படுத்தும் வாக்கியம். முதலில், இந்த வாக்கியத்தை கவனித்த ஜோ பைடன் துணைவியார் சற்று முகம் சுழித்தார். ஆனால், ஜோ பைடன் எதையும் பொருட்படுத்தாமால், நான் அதனை ஒப்புக்கொள்கிறான் என்று கூறினார்.
லெட்ஸ் கோ பிரான்டன் என்றால் என்ன?
முன்னதாக, அமெரிக்கா கார் பந்தைய போட்டியில் வெற்றி பெற்ற பிரான்டன் ப்ரவுன் என்பவரை என்பிசி ஸ்போர்ட்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கெல்லி ஸ்டாவாஸ்ட் நிருபர் ( Kelli Stavast) நேர்காணல் செய்தார். அப்போது, மைதானத்தில் இருந்து வலதுசாரி ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜோ மிகுவும் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொண்டு ஜோ பைடனை அழைத்து வந்தனர். அப்போது, ஸ்டுடியோவில் உள்ள நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பேசிய அந்த நிருபர், " இங்கு மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வரும் காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டு வருகிறோம். லெட்ஸ் கோ பிரான்டன் என்ற முழக்கம் நிறைந்திருக்கிறது" என்று தெரிவித்தார்.
Awe.. u guys found a man named Brandon as the race car driver Brandon.I wonder why you guys posted that (maybe to untruthfully imply that the “chant” came from this guy, instead of the race car driver? Insinuating racism-questions from a curious mind)🤔
— Ana Luisa Ciaglia (@AnaCiaglia) October 22, 2021
LETS GO BRANDON!!! 🥳🇺🇸 👇🏻 pic.twitter.com/PEyoz5Ii8g
அன்றில் இருந்து, இன்று வரை, அமெரிக்க அதிபரை சிறுமைப்படுத்த முயற்சிக்கும் வலதுசாரிகளும், பிற்போக்குவாதிகளும், 'லெட்ஸ் கோ பிராண்டன்' என்ற வாசகத்தை உச்சரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்