King Charles : மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச முயற்சி...அதிர்ந்து போன மக்கள்...யார் அந்த மர்ம நபர்..?
ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மன்னரும் ராணியும் யார்க்கிற்கு சென்றனர்.
பிரிட்டனில் யார்க் நகரத்தில் நடைபயணத்தின் போது மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டைகளை வீச முயன்ற ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்று, சார்லஸ் மன்னரின் வருகைக்காக நகரத்தில் உள்ள மிக்லேகேட் பாரில் அமைக்கப்பட்ட தற்காலிக வேலிக்குப் பின்னால் போலீஸ் அதிகாரிகள் அந்த சந்தேக நபரை தரையில் தள்ளி தடுத்து நிறுத்தினர்.
மன்னரையும் ராணியையும் தலைவர்கள் யார்க்கிற்கு வரவேற்றனர். அப்போது, ஒரு எதிர்ப்பாளர் அவர்கள் மீது மூன்று முட்டைகளை எறிந்தார். ஆனால், அவை அவர்கள் மீது படவில்லை. இதையடுத்து, மன்னரும் ராணியும் அந்த இடத்திலிருந்து அழைத்து செல்லப்பட்டனர்.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு; ஒருவர் கைதுhttps://t.co/wupaoCzH82 | #KingCharlesYork #CharlesIII #UK pic.twitter.com/QF1AvDQdZI
— ABP Nadu (@abpnadu) November 9, 2022
அந்த நபர் முட்டைகளை எறிந்தபோது அரச குடும்பத்தாரை நோக்கி கத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. "இந்த நாடு அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டது" என்றும், "மன்னரால் அல்ல" என்றும் அவர் கூச்சலிடுவது பதிவாகியுள்ளது. சுமார் நான்கு காவல்துறை அதிகாரிகள், அவரை தடுத்தி நிறுத்தி பிடித்தனர்.
கூட்டத்தில் இருந்த சிலர் "கடவுளே ராஜாவை காப்பாற்றுங்கள்" என்று கோஷமிட்டனர். மற்றவர்கள் எதிர்ப்பாளர் மீது "வெட்கப்படுங்கள்" என்று கூச்சலிட்டனர். மன்னரை வரவேற்கும் குழுவில் இடம்பெற்ற யார்க் நகரத்தின் தலைமை செயல் அதிகாரி, மன்னர் மீது வீசப்பட்ட முட்டைகளில் ஒன்றை தடுத்தார்.
போலிஸார், அந்த நபரை தடுத்து நிறுத்தியபோது, சார்லஸ் எந்த வித பதற்றமும் இன்றி, மக்களிடம் உரையாடினார். மன்னரை நகரத்திற்கு வரவேற்கும் பாரம்பரிய நிகழ்வின்போது இச்சம்பவம் அரங்கேறியது.
பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மன்னரும் ராணியும் இன்று யார்க்கிற்கு சென்றிருந்தனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் யார்க்கிற்கு சென்றனர். இது, அவரது மரணத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட முதல் சிலையாகும்.
யார்க் மினிஸ்டரில் நடந்த விழாவில் பேசிய சார்லஸ், "மறைந்த ராணி தனது வாழ்நாளில் தனது மக்களின் நலனுக்காக எப்போதும் விழிப்புடன் இருந்தார். வரப்போகும் நூற்றாண்டுகளுக்கு அவரின் சிலை ராணி எலிசபெத் சதுக்கமாக மாற போகிறது" என்றார்.
🚨 MAN IN YORK IS DETAINED AFTER THROWING EGGS AT KING CHARLES 🚨 pic.twitter.com/7xmdooYA5z
— PoliticsJOE (@PoliticsJOE_UK) November 9, 2022
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.