(Source: ECI/ABP News/ABP Majha)
Japan Earthquake: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு..! பீதியில் உறைந்த மக்கள்..!
ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பானின் ஹொக்கைடோ என்ற பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. உலகம் முழுவதும் துருக்கி நிலநடுக்கத்திற்கு பிறகு பெரிய, பெரிய அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலநடுக்கம் ஜப்பான் நேரப்படி மாலை 6.18 மணிக்கு 20 கிலோ மீடர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அள்வுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்த கூடியது. ஆனால், ஜப்பான ஊடங்கள் இதுவரை சேதம், காயம் மற்றும் இழப்பு குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. அதேபோல், சுனாமி எச்சரிக்கையும் எதுவும் விடுக்கப்படவில்லை.
ஜப்பானின் வடக்குத் தீவான ஹொக்கைடோவில் ஒரு மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். கடந்த பிப்ரவரி 25 ம் தேதி ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும், மார்ச் மாத தொடக்கத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் புகுஷிமா மாகாணத்தின் கிழக்கே காணப்பட்டது. இதே பகுதியில் சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின்போது 2 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் இழந்து தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.
கடந்த ஜனவரி 21ம் தேதி தென்மேற்கு ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின்போது 13 பேர் காயமடைந்தனர்.
ஜப்பானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்:
ஜப்பானில் நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படும். ஜப்பான் பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" மீது இருப்பதால் இப்படியான சூழ்நிலையை அடிக்கடி சந்திக்கிறது. இது தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு செயல்பாட்டின் வளைவாகும்.
இதன் காரணமாக வலுவான நிலநடுக்கங்களைத் தாங்கக்கூடிய கட்டிடங்களை உறுதிசெய்யும் நோக்கில் கடுமையான கட்டுமான விதிமுறைகளை ஜப்பான் நாடு கொண்டுள்ளது.