மேலும் அறிய

ஈரான் போர் ஓவர்... டிரம்பின் மாஸ்டர் பிளான்! அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு 'செக்' வைத்த வெள்ளை மாளிகை

Iran War : ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை ஒரு காரணமாகக் காட்டி, ஈரானுடனான தனது இராணுவ மோதல் திறம்பட முடிவுக்கு வந்துவிட்டது என்று டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாதாடுகின்றனர்.

ஈரான் உடனான ராணுவ மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் வாஷிங்டனில் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஏப்ரல் தொடக்கத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, ராணுவ நடவடிக்கைகளைத் தொடர நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இனி இல்லை என்று வெள்ளை மாளிகை வாதிடுகிறது. அமெரிக்க அரசின் இந்த அதிரடி நிலைப்பாடு, சட்ட ரீதியான விதிகளில் டிரம்ப் நிர்வாகம் தனக்கு சாதகமான விளக்கங்களை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களிடையே கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த போர்நிறுத்த ஒப்பந்தம்

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பிட் ஹெக்செத் செனட் சபையில் அளித்த வாக்குமூலத்தில், போர்நிறுத்தம் காரணமாக தற்போதைய நேரடி சண்டைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் 60 நாட்களுக்கு மேல் போர் நீடித்தால் நாடாளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற 'போர் அதிகாரத் தீர்மானத்தின்' காலக்கெடு இப்போது செல்லுபடியாகாது என்பது டிரம்ப் அரசின் வாதமாகும். பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதல்கள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், ஏப்ரல் 7 முதல் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் அரசு தரப்பு உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடரும் ராணுவ முற்றுகையும் பதற்றமும்

நேரடி போர் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், களத்தில் பதற்றம் இன்னும் தணியவில்லை. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் தொடர்ந்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாக முடக்கும் நோக்கில் அமெரிக்க கடற்படை அந்தப் பகுதியில் தீவிரமான கடல்வழி முற்றுகையைப் பராமரித்து வருகிறது. நேரடி சண்டையை நிறுத்திவிட்டு, அதே சமயம் பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுக்கும் இந்த இரட்டை நிலைப்பாடு, உண்மையில் போர் முடிந்துவிட்டதா என்ற கேள்வியை எம்.பி.க்களிடையே எழுப்பியுள்ளது.

போருக்கான காரணம்:

இந்தத் தற்போதைய மோதல் கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலுடன் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்தைப் பாதித்தன. இது தொடர்பாக மார்ச் 2 அன்று டிரம்ப் நாடாளுமன்றத்திற்கு முறைப்படி அறிவிப்பு வெளியிட்டார். தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்க்க நாடாளுமன்றம் தீர்மானம் கொண்டு வந்தாலும், அதை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரத்து செய்ய வாய்ப்புள்ளது. பொதுவாக இத்தகைய அதிகார மோதல்களில் நீதிமன்றங்கள் தலையிட விரும்பாத நிலையில், இது ஒரு நீண்ட அரசியல் போராட்டமாகவே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget