USA RUSSIA: வரட்டா ட்ரம்பே..! தனி ட்ராக் போடும் ரஷ்யா - இனி தடை போட்டாலும் நோ ப்ராப்ளம் - 162kM ஷார்ட் கட்
USA RUSSIA: மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கான புதிய தீர்வாக, ரஷ்யா மற்றும் ஈரான் இடையேயான புதிய ரயில் வழித்தட திட்டத்தை புதின் விரைவுபடுத்தியுள்ளார்.

USA RUSSIA: ரஷ்யா மற்றும் ஈரான் இடையே 162 கிலோ மீட்டர் தூரத்திற்கான புதிய ரயில் வழித்தடம், பொருளாதார சூழலை மாற்றி அமைக்கும் என நம்பப்படுகிறது.
ரஷ்யா - ஈரானின் புதிய திட்டம்:
மேற்கத்திய நாடுகளால் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட ஈரானும், ரஷ்யாவும், அமெரிக்காவால் தலையிட முடியாத திட்டத்தைக் கொண்டு பதிலடி கொடுக்க தயாராகி வருகின்றன. உலகளாவிய வர்த்தகத்தை முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யக்கூடிய 162 கிலோமீட்டர் ரயில் பாதை திட்டம் தான் அது. இது பயன்பாட்டிற்கு வந்தால், மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட பல பொருளாதார தடைகள், எந்தவித பலனும் இல்லாததாக மாறிவிடும் என கூறப்படுகிறது.
ராஷ்த் - அஸ்தாரா ரயில் தடம்:
அஜெர்பைஜானில் உள்ள அஸ்தாரா மற்றும் ஈரானின் ராஷ்த் இடையேயான ரயில் வழித்தடமானது வெறுமென போக்குவரத்து திட்டம் மட்டும் கிடையாது. இது சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் (INSTC) விடுபட்ட இணைப்பாகும். புதிய திட்டத்தால் வர்த்தக செலவுகள் 30 சதவிகிதம் வரை குறையும், கப்பல் மூலமான பயணத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் 37 நாட்கள் என்பது, ரயில் மூலம் வெறும் 19 நாட்களாகக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட 7,200 கிலோமீட்டர் நெட்வர்க்காகும். இது பாரம்பரிய சூயஸ் கால்வாய் வழியான பயணத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை காட்டிலும் பாதியாகும். மேலும் உலகின் மிகவும் கடுமையாக தடைசெய்யப்பட்ட இரண்டு நாடுகளுக்கு, பொருளாதார விடுதலையாகவும் கருதப்படுகிறது.
வாரிக் கொடுக்கும் ரஷ்யா:
ராஷ்த் - அஸ்தாரா ரயில் திட்டத்திற்கு அதிகப்படியாக ரஷ்யா சுமார் 16 ஆயிரத்து 463 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. ஜனவரி 2025 இல் கையெழுத்திடப்பட்ட ஈரான் உடனான 20 ஆண்டு விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்ய பொறியாளர்களால் இந்த வழித்தடம் கட்டமைக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய திட்ட பணிகள், வரும் 2028ம் ஆண்டு முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூயஸ் கால்வாய் அல்லது மலாக்கா ஜலசந்தி போன்ற கடல்சார் தடைகளைப் போலல்லாமல், இந்த வழித்தடத்தை அமெரிக்க கடற்படைகளால் முற்றுகையிடவோ அல்லது ஐரோப்பிய வங்கிகளால் முடக்கவோ முடியாது.
20 டன் வர்த்தகம் - சீனா தீவிரம்
இந்த வழித்தடமானது இரு நாடுகளையும் ஒரு இணையான பொருளாதார வரிசையில் முக்கியமானவர்களாக மாற்றுகிறது. கட்டி முடிக்கப்பட்டவுடன் எண்ணெய், எரிவாயு, எஃகு, உணவு மற்றும் இயந்திரங்கள் என ஆண்டுதோறும் 20 மில்லியன் டன் சரக்குகளை எடுத்துச் செல்ல உதவும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவும் மேற்கத்திய கடற்படை சக்தியால் முழுமையாகத் தொடப்படாத பாதைகள் வழியாக இந்த வர்த்தகம் நடைபெற உள்ளது.
இதனிடையே சீனாவும் இந்த திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அவர்களது பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி INSTC உடன் சரியாகப் பொருந்தி, தென் சீனக் கடலில் இருந்து பால்டிக் வரை ஒரு தடையற்ற வர்த்தக நெட்வொர்க்கை உருவாக்குகிறது. BRICS மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற குழுக்களுடன் சேர்ந்து, இந்த வளர்ந்து வரும் கூட்டணியும் மேற்கத்திய தடைகளை சட்டவிரோதமானது என்று அமைதியாக நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ஆசியாவின் தாக்கம்..
2024 ஆம் ஆண்டில் மாஸ்கோவால் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் கூட, பாகிஸ்தானை முற்றிலுமாக தவிர்த்து, மத்திய மற்றும் தெற்காசியாவிற்குள் வழித்தடத்தை விரிவுபடுத்தும் ஒரு முக்கியமான சந்திப்பாக மாறக்கூடும். இதற்கிடையில், இந்தியாவின் சவாலாக இருக்கும் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடமானது தற்போது வரை வரைபடமாகவே உள்ளது. அதற்கு நேர்மாறாக, INSTC ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது, ரயில்கள் இயக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. எனவே, எதிர்காலத்தில் இந்தியாவிற்கும் இது ஒரு பயனுள்ள திட்டமாக மாறலாம். ராஷ்ட் மற்றும் அஸ்டாரா இடையேயான ஒவ்வொரு கிலோமீட்டரும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கிறது. இனி தனிமைப்படுத்தல் என்பது காலாவதியானது, மேலும் உலகம் இனி ஒரு துருவத்தை மட்டுமே நம்பி இயங்கப்போவதில்லை என்பதையும் உணர்த்துகிறது.





















