Infosys From Russia : ரஷ்யாவில் இருந்து வெளியேறும் இன்ஃபோசிஸ்: உக்ரைன் போர் காரணமா?
ரஷ்யாவில் அந்த நிறுவனத்தின் வணிகத்தைப் பொருத்தவரை நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை அறிவித்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனுடனான மோதலுக்குப் பிறகு மென்பொருள் வணிக ரீதியாக ரஷ்யா பல ச்றுக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனம் தனது வணிகத்தை ரஷ்யாவில் அதிகாரபூர்வமாக நிறுத்திக் கொள்வதாக இன்று அறிவித்துள்ளது., உக்ரைன் மோதலின் பின்னணியில் இந்த முடிவைத் தங்கள் நிறுவனம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆரக்கிள் கார்ப் மற்றும் எஸ்ஏபிஎஸ்இ உட்பட பல உலகளாவிய ஐடி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது அனைத்து செயல்பாடுகளையும் உக்ரைன் மீதான போர் காரணமாக இடைநிறுத்தியுள்ளன.
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இன்ஃபோசிஸ் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சலீல் பரேக், "சூழலைப் பார்க்கும்போது எங்கள் வணிகம் மற்றும் எங்கள் பணிகள் அனைத்தையும் ரஷ்யாவிலிருந்து ரஷ்யாவிற்கு வெளியே மாற்றத் தொடங்கினோம்.
ரஷ்யாவில் அந்த நிறுவனத்தின் வணிகத்தைப் பொருத்தவரை நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை அறிவித்த பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சலீல் பரேக், இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் 100க்கும் குறைவான ஊழியர்களையே கொண்டுள்ளது என்றார்.
Breaking: One of India's largest IT company Infosys @Infosys says moving out of Russia; CEO Salil Parekh says,"We have started to transition all of our work from our centers in Russia, to outside Russia". pic.twitter.com/sKsiViDo6R
— Sidhant Sibal (@sidhant) April 13, 2022
"எங்களுக்கு ரஷ்யாவில் வாடிக்கையாளர்கள் இல்லை. ரஷ்யாவில் நாங்கள் செய்யும் பணி உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கானது, இந்தச் சூழலில்தான் ஒரு மாற்றத்தைத் தற்போது தொடங்கியுள்ளோம். இந்த கட்டத்தில் இன்ஃபோசிஸ் கண்ணோட்டத்தில் எங்கள் வணிகத்துக்கு இதனால் எந்தவிதத் தாக்கமும் இல்லை," என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், அந்தப் பகுதியின் வளர்ச்சியில் நிறுவனம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது என்றார். "களத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாங்கள் மிகவும் வருத்தம் கொண்டுள்ளோம்," என்று சலீல் பரேக் கூறினார்.
"With the acceleration of digital disruptions across industries, we see immense potential to engage and partner with clients as they transform, adapt and thrive”, says @SalilParekh, Infosys. Click here for more updates. https://t.co/IN0LMPYw6h #InfosysQ4FY22 pic.twitter.com/TpJRsRfa5u
— Infosys (@Infosys) April 13, 2022
ரஷ்யாவில் உள்ள தனது ஊழியர்களை மற்ற நாடுகளில் உள்ள பகுதிகளில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் பணிபுரிய நிறுவனம் உதவும் என்றார்.