New Planet: சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு? செயற்கை நுண்ணறிவின் புதிய சாதனை..
செயற்கை நுண்ணறிவின் (AI) ஒரு வடிவமான இயந்திர கற்றலுக்கு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், வானியலாளர்கள் ஒரு புதிய கிரகத்தைக் கண்டறிய இதைப் பயன்படுத்தி உள்ளனர்.
செயற்கை நுண்ணறிவின் (AI) ஒரு வடிவமான இயந்திர கற்றலுக்கு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், வானியலாளர்கள் ஒரு புதிய கிரகத்தைக் கண்டறிய இதைப் பயன்படுத்தி உள்ளனர்.
ஜோர்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே முன்பு அறியப்படாத கிரகம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது வானியல் உலகில் செயற்கை நுண்ணறிவின் ஆரம்ப கட்டமாகும், ஏனெனில் வரும் காலங்களில் இது பல்வேறு துறைகளில் ஒரு சக்திவாய்ந்த கருவியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உள்ளது.
யுஜிஏ பிராங்க்ளின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஜேசன் டெர்ரி ஒரு அறிக்கையில் "இதனை பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கிரகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம், ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள மாதிரிகள் அந்த உருவகப்படுத்துதல்களை இயக்க எங்களுக்கு வழிகாட்டியுள்ளது. மேலும் இந்த புதிய கிரகம் இருக்கும் இடத்தை தெளிவாக காட்டியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய கண்டுபிடிப்பு சூரிய குடும்பத்திற்கு வெளியே காணப்படும் 5000-க்கும் மேற்பட்ட வெளிக்கோள்களின் வளர்ந்து வரும் பட்டியலில் சேர்க்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவை கிரக அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலான புதிய செயல்முறைகளை வெளிப்படுத்தியுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக விண்வெளி வீரர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளில் கிரகத்தின் இருப்பு குறித்து கண்டறியப்பட்டது. ஆனால் அது உறுதி படுத்தப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த தரவைச் சரிபார்த்து, ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதிய கிரகம் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டு பிடித்தது.
பழைய முறை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டால் ஒரு தட்டை வடிவம் தென்பட்டதாகவும் அது புதிய கிரகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) பயன்படுத்தி தரவுகளை சரிபார்த்து, தட்டை வடிவம் இருக்கும் பகுதியில் புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது என ஜேசன் குறிப்பிட்டார். இந்த ஆராய்ச்சியின் மூலம் வானியல் துறையில் பல்வேறு புதிய சாதனைகளை செய்யலாம் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amazon Layoff : பணிநீக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அமேசான்... மேலும் 9 ஆயிரம் பேருக்கு ஆப்பு...!