(Source: ECI/ABP News/ABP Majha)
Trump about Elonmusk : "நல்ல கைகளில் ட்விட்டர்…!" மீண்டும் ட்விட்டருக்கு வருகிறாரா டிரம்ப்...!
தற்போது, எலன் மஸ்க்கின் கீழ் வந்திருக்கும் ட்விட்டரை குறித்து டிரம்ப் என்ன நினைக்கிறார், திரும்பவும் அவர் ட்விட்டருக்கு வருவாரா என்ற கேள்விகள் எழுந்து வந்தன.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று ட்விட்டரை கோடீஸ்வரர் எலன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ததை பாராட்டினார்.
ட்விட்டரும் ட்ரம்பும்
ட்விட்டருக்கும் ட்ரம்புக்கும் ஏழாம் பொருத்தம் தான் இருந்து வந்துள்ளது. பல சர்ச்சைகளால் அவர் கணக்கு பல மாதங்கள் முன்பு முடக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது ட்விட்டரின் முதலாளி மாறியிருப்பதால், அதற்கு மகிழும் முதல் ஆள் டிரம்ப்பாகதான் இருக்கும். டிவிட்டர் நிறுவனத்தை வாங்க எலன் மஸ்க் தன்னுடைய பெரும் பகுதி டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து டிவிட்டரை கைப்பற்றியுள்ளார் என்பது அனைவரும் அறிந்துதான்.
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் உடன் சேர்த்து 5க்கும் அதிகமான உயர் மட்ட அதிகாரிகள் வெளியேறினாலும் நிர்வாகத்தில் பெரிய பாதிப்பு இல்லாத அளவிற்கு டெஸ்லா ப்ராடெக்ட் மேனேஜர்களைக் கொண்டு தடுமாற்றத்தை முதல் நாளிலேயேய தடுத்துள்ளார். தற்போது, எலன் மஸ்க்கின் கீழ் வந்திருக்கும் ட்விட்டரை குறித்து டிரம்ப் என்ன நினைக்கிறார், திரும்பவும் அவர் ட்விட்டருக்கு வருவாரா என்ற கேள்விகள் எழுந்து வந்தன.
டிரம்ப் ஐடி முடக்கம்
அமெரிக்க செனட் இயங்கி வந்த கேப்பிடல் ஹில் கட்டடத்துக்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் புகுந்த பின், டிரம்பின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கியது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் அவரது இடுகைகள் பலவும் அவமதிக்கும் வகையிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் இருந்ததால், கடந்த ஆண்டு ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவை, டிரம்பின் சில இடுகைகளை நீக்கின அல்லது அவரது பதிவின்கீழ் 'இது தவறாக வழிநடத்தப்படக்கூடிய இடுகை' என்ற வரியை இடம்பெறச் செய்தன.
ட்ரூத் ஆப்
அதன் பின் "ஃப்ளூ காய்ச்சலை விட குறைவான ஆபத்தை கொரோனா கொண்டிருந்தது" போன்ற இடுகைகளை அவர் அந்த நாட்களில் பகிர்ந்து வந்த நிலையில், உச்சமாக அதிபர் தேர்தல் முடிவுகளை ஒரு மோசடி என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார் டிரம்ப். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் டிரம்பின் சமூக வலைதளங்கள் முடக்கப் பட்டன. அதன் பிறகு அவரே தொடங்கிய சமுக ஊடக பக்கம்தான் 'Truth'. இதில் அவருக்கு நான்கு மில்லியன் பாலோயர்ஸ் மட்டுமே உள்ளனர். அதனால்தான் அவரிடம் மீண்டும் ட்விட்டருக்கு வருவாரா என்று எதிர்பார்கிறாராகள். தற்போது அது குறித்து அவரே பதில் கூறி இருக்கிறார்.
ட்விட்டர் நல்ல கைகளில் உள்ளது
உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க், பல மாத உரையாடல்களுக்குப் பின், கடந்த வியாழன் பிற்பகுதியில் நிறுவனத்தை $44 பில்லியனுக்கு வாங்கியது குறித்து பேசிய டிரம்ப், "ட்விட்டர் இப்போது நல்ல கைகளில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் நம் நாட்டை வெறுக்கும் தீவிர இடது பைத்தியக்காரர்கள் மற்றும் வெறி பிடித்தவர்களால் இனி இயக்கப்படாது, ஆனால் நான் இல்லாமல் ட்விட்டர் சிறப்பாக இருக்காது", என்று டிரம்ப் தனது 'truth' சமூக தளத்தில் கூறினார். ஏனென்றால் அவர் ட்விட்டர் பக்கம் பல மாதங்கள் முன்பு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.