Video: டிரம்ப் மீதான தாக்குதலை தொடர்ந்து ஆதரவாக களமிறங்கும் WWE சூப்பர் ஸ்டார்...வைரலாகும் வீடியோ..!
Hulk Support Trump: டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அளிப்பது கட்டாயம் என WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hulk Support Trump: WWE மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன், அமெரிக்க குடியரசு தேர்தலில், எனது ஹீரோ டொனால்ட் டிரம்புக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்:
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகவும், முதல் பணக்கார நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. வரும் நவம்பர் மாதத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார். ஜனநாயக கட்சி சார்பில் பைடன் களமிறங்குகிறார். ஆனாலும், பைடன் உடல்நலன் மற்றும் வயதை காரணம் காட்டி, ஜனநாயக கட்சியின் வேட்பாளராக வேறொருவர் நிறுத்தப்படுவார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு:
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, பொதுக் கூட்டமொன்றில் டொனால்ட் டிரம்ப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி குண்டானது, டிரம்ப்பின் காதை தாக்கியது. இந்நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதற்கு பைடன் உள்ளிட்ட பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மீண்டும் தேர்தல் களத்திற்கு டிரம்ப் வந்தார். அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து பரப்புரை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
WWE ஹல்க் ஆதரவு:
இந்நிலையில், உலக அளவில் மிகவும் பிரபலமான மல்யுத்த நிகழ்ச்சியாக WWE பார்க்க முடிகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர் மத்தியில் பிரபலமாக பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மிகவும் பிரபலம் வாய்ந்த ஹல்க் ஹோகன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் ஹல்க் பேசியதாவது,
முன்னாள் WWE சூப்பர் ஸ்டார் டிரம்ப் ஹல்க் ஹோகன் அளித்த நேர்காணலில், டொனால்ட் டிரம்பை ஆதரிப்பளிப்பது குறித்து பேசினார்.
டிரம்ப் தனது 'ஹீரோ', இந்த கடினமான காலங்களில் அவருக்கு தேவை என்று உணர்கிறேன். "என் ஹீரோ டொனால்ட் டிரம்பை தாக்கப்பட்டிருக்கிறார். நான் இனி அமைதியாக இருக்க முடியாது.
இங்குள்ள உண்மையான அமெரிக்கர்கள் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரை போலவே, நானும் ஒரு உண்மையான அமெரிக்கனாக இருக்க வேண்டும் எனவும், டிரம்புக்காக ஆதரவாக, எனது புகழை பயன்படுத்த போவதாகவும் WWE மல்யுத்த நிகழ்ச்சியில் 10 முறை உலக சாம்பியனானவரான ஹல்க் ஹோகன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hulk Hogan says his speech tonight will
— Wrestling News (@WrestlingNewsCo) July 18, 2024
be like bodyslamming Andre The Giant at WrestleMania. pic.twitter.com/8D2R8gHgub