How Pope is Elected: கத்தோலிக்க திருச்சபையின் போப் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் தெரியுமா.? முழு விவரம்...
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஃப்ரான்சிஸ் காலமான நிலையில், புதிய போப் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போஸ் ஃப்ரான்சிஸ் தனத 88-வது வயதில் இயற்கை எய்தியுள்ளார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். அடுத்ததாக, புதிய போப் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
போப்பாண்டவர் மாநாடு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப், ஒரு போப்பாண்டவர் மாநாட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். போப்பின் மரணம் அல்லது ராஜினாமாவிற்குப் பிறகு இந்த போப்பாண்டவர் மாநாடு நடைபெறும். ஒரு சிறப்பு கூட்டமான இதில், கார்டினல்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். 80 வயதிற்கு உட்பட்ட கார்டினல்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி உடையவர்கள். அவர்களின் எண்ணிக்கையும் 120-ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த கார்டினல்கள் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கூடுவார்கள்.
பின்னர், அங்கு நடைபெறும் ரகசிய வாக்குப்பதிவின் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவிப்பார்கள். அப்படி, மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்ற கார்டினல், போப்பாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஏதாவது ஒரு கார்டினல் தேவையான வாக்குகளை பெறாத வரையில், பலமுறை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கு கால நிர்ணயம் கிடையாது. எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும், போப் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் 4 சுற்று வாக்குப்பதிவு நடைபெறும்.
போப் தேர்வை தெரிவிக்கும் புனித புகை
இப்படி, ஒவ்வொருமுறை வாக்குச்சீட்டுகள் எரிக்கப்படும்போது, தேவாலயத்திற்கு அருகே உள்ள அடுப்பில் கரும்புகை வெளிப்படும். கரும்புகை வரும் வரை போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது வெளியில் இருப்போருக்கு தெரியவரும். பின்னர், போப் தேர்வான உடன், அந்த அடுப்பில் வெள்ளை புகை வெளிப்படும். இதன் மூலம் போப் தேர்வாகிவிட்டார் என்பது தெரியவரும்.
புதிய போப் குறித்த அறிவிப்பு
பலமுறை வாக்கெடுப்புக்குப் பின் தேர்வாகும் கார்டினல் போப்பாக அறிவிக்கப்படுகிறார். அதன் பின்னர், இறந்த போப்பின் இறுதிச் சடங்குகள் மற்றும் புதைகுழி ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. 9 நாட்கள் அதிகாரப்பூர்வ துக்கம் அறிவிக்கப்பட்டு, போப் இறந்த 4-வது மற்றும் 6-வது நாட்களுக்கு இடையில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இயற்கை எய்தும் போப்புகளின் உடல்கள், பொதுவாக செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில், மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

