Canada Temple: கனடாவில் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில்: இந்திய அரசு கொடுத்த ரியாக்சன் என்ன தெரியுமா?
Canada Hindu Temple Attacks: கனடா நாட்டில் உள்ள இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது, சுவர்களில் இழிவுபடுத்தும் விதமாக வாசகங்கள் எழுதப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் உள்ள இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில்:
ஜூலை 22 அன்று, கனடா நாட்டில் உள்ள எட்மண்டன் பகுதியில் உள்ள BAPS ஸ்வாமிநாராயண் மந்திர் இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு கனடா நாட்டில் உள்ள மக்கள் மட்டுமன்றி, இந்தியாவில் உள்ள மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் எழ ஆரம்பித்தன.
இந்தியா ரியாக்சன்:
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், ஜூலை 22 அன்று இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டது.
சேதத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு எதிராக "நடவடிக்கை இல்லாததற்கு கனேடிய அதிகாரிகளை குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இதுபோன்ற இந்து கோயில்களுக்கு எதிரான தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வாகிவிட்டன.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில், இந்த விவகாரம் கனடா மற்றும் டெல்லியில் உள்ள கனேடிய அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டதாக கூறினார்.
இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் மீது விரைவான நடவடிக்கையை கனடா அதிகாரிகள் எடுப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்றும் தெரிவித்தார்.
#WATCH | On the reports on the vandalization of the Temple in Edmonton, Canada, MEA Spokesperson Randhir Jaiswal says, "We have strongly taken up the matter with Canadian authorities, both in Delhi and Ottawa. We condemn the vandalization. We expect the local authorities to take… pic.twitter.com/rH4gMD3uPZ
— ANI (@ANI) July 25, 2024
வன்முறை மூலம் அச்சுறுத்த நினைக்கும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக கனடா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தீவிரவாதம் மற்றும் வன்முறையில் ஈடுபடுவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும், இல்லையெனில் கனடாவில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்மைத்துவத்திற்கான மரியாதை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.