மேலும் அறிய

Hantavirus: அடுத்த ஆபத்து; சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ்; 3 பேர் பலி- எங்கே? எப்படி?

Hantavirus Outbreak: தென் ஆப்பிரிக்காவில் ஆடம்பர சொகுசுக் கப்பல் ஒன்றில் ஹண்டா என்னும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 3 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அருகே ஆடம்பர சொகுசுக் கப்பல் ஒன்றில் ஹண்டா என்னும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 3 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து MV Hondius என்று பெயர் சூட்டப்பட்ட கப்பலில் இருந்த 150 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது கேப் வர்டி என்னும் இடத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுளது. 

3 பேர் மீட்பு

கப்பலில் இருந்து நேற்று (புதன்கிழமை)  மூன்று பயணிகள் மீட்கப்பட்டனர், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஒரு நோயாளி தற்போது தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார், அதே நேரத்தில் சுவிட்சர்லாந்துக்குத் திரும்பிய மற்றொரு முன்னாள் பயணி ஸூரிச்சில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த அறிகுறிகளும் இல்லாமல் தற்போது கப்பலில் இருக்கும் அனைத்து பயணிகளும், கப்பல் கேனரி தீவுகளை அடைந்தவுடன் இறங்க அனுமதிக்கப்படுவார்கள். எனினும் அவர்கள் ஸ்பெயினின் இராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், மற்ற அனைத்து பயணிகளும் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, அந்தந்த நாடுகளின் சுகாதார நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

அது என்ன ஹண்டா வைரஸ்?

ஹண்டா வைரஸ்கள் என்பவை எலி, அணில், முள்ளம்பன்றிகள் உள்ளிட்ட கொறித்துண்ணிகளால் (rodents) பரவும் வைரஸ்கள் ஆகும், அவை மனிதர்களுக்குத் தொற்று நோயை உண்டாக்கக்கூடியவை.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 10,000 முதல் 100,000 பேருக்கு இந்த நோய் ஏற்படுகிறது, இதன் தீவிரம் குறிப்பிட்ட வகையைப் பொறுத்து மாறுபடும்.

சொகுசுக் கப்பலில் கண்டறியப்பட்ட ஹண்டா வைரஸ், ஏண்டஸ் ஹண்டா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் அர்ஜெண்டினா மற்றும் சிலி நகரங்களில் இருக்கும். இந்தக் கப்பல் ஏப்ரல் 1ஆம் தேதி அர்ஜெண்டினாவில் இருந்து கிளம்பியது குறிப்பிடத்தக்கது.


Hantavirus: அடுத்த ஆபத்து; சொகுசுக் கப்பலில் பரவிய ஹண்டா வைரஸ்; 3 பேர் பலி- எங்கே? எப்படி?

வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

ஹன்டா வைரஸ் முதன்மையாக விலங்குகள் மூலம் பரவுகிறது. எலிகள் அல்லது சுண்டெலிகளுடனான தொடர்பு, அல்லது அவற்றின் சிறுநீர், எச்சம், அல்லது உமிழ்நீர் வழியாக இது மனிதர்களுக்குத் தொற்றுகிறது.

பெரும்பாலும் வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்யும்போது இந்த வைரஸ் காற்றில் பரவுகிறது. அரிதான சூழல்களில், அசுத்தமான மேற்பரப்புகள் மூலமாகவும் ஹண்டா வைரஸ் பரவுகிறது.

எனினும் பொதுமக்கள் நலனுக்கு ஒட்டுமொத்தமாக ஏற்படும் அபாயம் குறைவே என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget