மேலும் அறிய

Greece Accident : கிரீஸில் பெரும் சோகம்.. 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து...32 பேர் உயிரிழப்பு..

கிரீஸில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Greece Accident : கிரீஸில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் வடக்கு கிரீஸில் பயணி ரயில் எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 85 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரீஸ் நாட்டின் ஏதேனிசில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.  இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 85 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு துறையினரும் வந்தனர். இந்த கோர விபத்தில் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியுள்ளவர்களை மீட்டனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மீட்பு  பணிகள் நடைபெற்று வரும் சூழலில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அதிகாலை இரண்டு ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 32 பேர் உயிரிழந்து செய்தி அறிந்து வேதனை அடைந்ததாக கிரீஸ் அரசு  தெரிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது. 

இதனை அடுத்து ஐரோப்பியா குடியரசுத் தலைவர் ராபர்டா மேட்சோலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”கிரீஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்து இரங்கல் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, 1972ஆம் ஆண்டில் லாரிசாவ் என்ற நகருக்கு அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 19 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

Gas Cylindrer Rate : புதிய மாதம் விடிந்ததும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை... அதுக்கு இவ்வளவு ரேட்டா..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
Breaking News LIVE: போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
TN Rain: 26 மாவட்டங்களில் இன்று மாலைவரை மழைதான்; குடையுடன் வெளியே போங்க மக்களே!
Breaking News LIVE: போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
போதை பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன - நடிகர் சூரி
Singapore Coronavirus: மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
மாஸ்க் இனி கட்டாயமாம்..! சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு..
Behind The Song: எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
எம்ஜிஆர் பாடலை மாற்றிய இளையராஜா.. ”புது மாப்பிள்ளைக்கு” பாடல் உருவான கதை!
125 கிடாய், 2600 கிலோ அரிசி:  ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
125 கிடாய், 2600 கிலோ அரிசி: ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட அசைவ விருந்து!
Watch Video: பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
பிளே ஆஃப் சென்ற ஆர்.சி.பி: வெற்றிக்கு பிறகு ஆனந்த கண்ணீர் வடித்த கோலி, அனுஷ்கா சர்மா..!
Fact Check: 10 வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் உதவித்தொகையா? உண்மை என்ன?
Fact Check: 10 வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம், வாஜ்பாய் பெயரில் உதவித்தொகையா? உண்மை என்ன?
Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு  நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?
Crime: கணவனை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி: சிக்கியது எப்படி?
Embed widget