15 வயது பேத்தியை 50 வயது ஆணுக்கு திருமணம் செய்த பாட்டி கைது !
தன்னுடைய பேத்தியை 50 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த பாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொதுவாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது உலகில் இன்னும் முழுமையாக நிற்கவில்லை. குறிப்பாக ஒரு சில பகுதிகளில் இன்னும் இது வழக்கமாகவே தொடர்ந்து வருகிறது. அப்படி ஒரு பகுதியில் பாட்டியே தன்னுடைய 15 வயது பேத்தியை 50 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். எங்கே இது நடந்தது?
தென்னாப்பிரிக்கா நாட்டின் கிழக்கு கேப் பகுதியில் சமீப காலங்களாக குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறதாக தகவல் வெளியாகி வருகிறது. இதை தடுக்க அந்நாட்டு அரசு அனைத்து முயற்சியையும் எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் அமைப்பிற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி 15 வயது மதிக்க சிறுமியை 50 வயது நபர் ஒருவர் திருமணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் மகளிர் காவல்துறைக்கு தகவல் அளித்து அச் சிறுமியை மீட்க சென்றுள்ளனர்.
அப்போது நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிறுமியின்66 வயது பாட்டியும் சிறுமியும் தினமும் இந்த நபர் பாதிரியாராக வேலை பார்க்கும் தேவாலயத்திற்கு சென்று வந்துள்ளனர். அப்போது இந்த இச்சிறுமியை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக பாட்டி கூறியதாக தெரிகிறது. இதன்காரணமாக 7ஆம் வகுப்பு படித்து வந்த தன்னுடைய பேத்தியை பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார். அதன்பின்னர் அவரை இந்த நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதற்கு அந்த சிறுமி சம்மதம் தெரிவிக்கவில்லை. எனினும் அவருடைய எதிர்ப்பையும் தாண்டி இத்திருமணத்தை பாட்டி நடத்தியுள்ளார். இந்தச் சூழலில் இவர்கள் சேர்ந்து வாழ்ந்தது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அச்சிறுமியை சென்று மீட்டுள்ளனர். தற்போது அச்சிறுமி மீட்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடம் அவரது பாட்டி மற்றும் அந்த 50 வயது நபரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியை விருப்பம் இன்றி கடுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பகுதியில் ஏற்கெனவே குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலிலும் இதுபோன்ற செயல்கள் இன்னும் நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பாட்டியே பேத்திக்கு இப்படி காரியத்தை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணங்கள் எவ்வளவு மோசமான குற்றம் என்பதை இன்னும் இந்த சமூகம் உணரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் படிக்க: "ஸ்கெட்ச்சு மரத்துக்கு இல்லடா.. உனக்குதான்" : ட்ரெண்டாகும் சூப்பர் வைரல் வீடியோ..!