மேலும் அறிய

Gotabaya resigns: இது நடக்கவில்லையென்றால், கோட்டபய மறைமுக இலங்கை அதிபராக செயல்படுவாரா?

சிலரை பதிவி நீக்கம் செய்யவில்லையென்றால், இலங்கை அதிபர் கோட்டபய பதவி விலகினாலும் கூட, மறைமுக அதிபராக செயல்படுவார் என கூறப்படுகிறது

பதவி விலக தயார்:
 
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவர்கள் கூறியதாக ஊடகங்களில் ஒரு செய்தி உலா வருகிறது. அதில் தான் பதவி விலக தயார் என்றும் புதன் வரை அவகாசம் வேண்டும் என்றும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கோத்தபய கேட்டுக் கொண்டிருக்கிறார். மிகப்பெரிய மக்கள் புரட்சிக்கு முன்பு மக்களால் புறம் தள்ளப்பட்ட கோத்தபாய மிகவும் தைரியமாக இருக்கிறார் என்றால் முப்படைகளும் இவருக்கு பக்கபலமாக இருக்கிறது என்று நம்பப்படுகிறது.
 
கோட்டபய நியமித்தவர்:
 
தற்போதைய முப்படைகளுக்குமான தளபதி சவேந்திர சில்வா, இரண்டு நாட்களாக இந்தியாவில் முகாமிட்டு இருந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கோத்தபாயவினால் இந்த பதவிக்கு கொண்டுவரப்பட்டவர், இன அழிப்பு போரில் மிக முக்கிய பங்காற்றியவர், கோத்தபாயவின் மன ஓட்டத்திற்கு ஏற்றபடி செயல்படுபவர். இதில் நகைப்புக்குரிய  விஷயம் என்னவென்றால், இந்த முப்படைகளுக்குமான தளபதி முழுவதுமாக சீனாவின் ஆதரவு மனநிலை கொண்டவர்.

Gotabaya resigns: இது நடக்கவில்லையென்றால், கோட்டபய மறைமுக இலங்கை  அதிபராக செயல்படுவாரா?
முப்படைகளுக்குமான தளபதி சவேந்திர சில்வா:
 
இவர் இப்படி என்றால் ராணுவ செயலர் என்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர் கமல் குணரத்தின. அதிபருக்கும் முப்படைகளுக்கும்  இடையில் கட்டளைகளை பிறப்பிக்கும் அதிகாரத்தில் இருப்பவர். இவர் ஒரு தீவிர  இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்டவர். கடந்த காலங்களில் ராஜீவ் காந்தி இலங்கை வாழ் தமிழர்களுக்கு விமானத்தில் உணவுப்பொருளை அனுப்பினார். அப்போது, அதைகமல் குணரத்தின பகிரங்கமாக எதிர்த்தார். அப்போதே தங்களிடம் ஏவுகணைகள் இருந்தால், இந்தியா வடகிழக்கு மக்களுக்கு உணவு வழங்க அனுப்பிய அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தி, காலால் போட்டு மிதித்திருப்போம் என அவர் அப்போது தெரிவித்ததாக  வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன.
 
இந்தியாவை நம்பலாம்:
 
இவர்களை வைத்துக்கொண்டு தான் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கோத்தபாயே மூன்று நாட்கள் அவகாசம் கேட்டது மட்டுமல்லாமல், உலக நாடுகளில் இருந்து குறிப்பாக சீனாவோ அல்லது இந்தியாவோ தனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் அவகாசம் கேட்டிருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை மோடி தலைமையிலான பாஜக அரசு வெளி விவாகரத்துறையில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய யுக்திகளை கையாண்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் புரட்சிக்கு எதிரான செயல்களை ஒருபோதும் செய்யாது என்றே நம்பலாம்.
 
சீனா உதவ வாய்ப்புண்டு:
 
ஆனால் சீனா ஒருபொழுதும் ஜனநாயகத்தையோ மக்கள் புரட்சியையோ விரும்பாத ஒரு நாடு.  ஆகவே தனது நண்பர்களான கோத்தபாய ராஜபக்ஷவின்  குடும்பத்திற்கு உதவிகளை செய்து, அவரை மீண்டும் அதிபராக முயற்சி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
 
மறைமுக அதிபராக செயல்படுவார்:
 
ஒருவேளை வெளிநாடு மற்றும் மக்களின் அழுத்தங்களுக்காக கோட்டபய பதவிகளை விலகினாலும் கூட, இராணுவத்தில் இருக்கும் தன்னுடைய முப்படைகளின் தலைமை தளபதி  மற்றும்  பாதுகாப்புத்துறை செயலாளர்  என தனது ஆதரவாளர்கள் மூலமாக அவர்தான் மறைமுக அதிபராக இருப்பார். அதனால் தற்போதைக்கு மழை விட்டாலும் தூறல் விடாது என்பதைப் போல கோத்தபாய காலத்தில் ராணுவத்தில் முக்கிய பொறுப்புகளிலும், அரசு துறைகளில்  செயலாளர்களாக இருந்தவர்களும் மாற்றப்பட்டால் மட்டுமே, முற்றிலுமாக ராஜபக்ச குடும்பத்திடமிருந்து இலங்கை காப்பாற்றப்படும் என இலங்கை மக்கள் விரும்புகிறார்கள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Embed widget