Viral Video : அப்பா.. லவ் யூ அப்பா.. பட்டம் வாங்கிய அப்பாவை பார்த்து நெகிழ்ந்த குழந்தை.. வைரல் வீடியோ
தங்கள் நாளையே இந்த வீடியோ அழகாக்கியுள்ளது என உணர்ச்சிப் பெருக்குடன் இன்ஸ்டா பயனர்கள் கமெண்ட்ஸ் பகிர்ந்து இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஸ்காட்லாந்தில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் பட்டம்பெற மேடையேறிய தன் தந்தையை பெருமை தாளாமல் வாழ்த்தி மகிழும் மகளின் க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
மழலைக் குரலில் உரக்க ’லவ் யூ’
உற்சாமாக மேடையேறும் அப்பாவுக்கு அதீத பெருமையுடன் லவ் யூ சொல்லி மகிழும் மகள், இதில் நெகிழ்ந்து மகளுக்கு எதிர்வினையாற்றும் தந்தை, கரகோஷம் எழுப்பும் கும்பல் என உணர்வுப்பூர்வமாகவும் க்யூட்டாகவும் உள்ள இண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
சிவேனல வாடே எனும் இத்தந்தை இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ 12.8 லட்சம் லைக்குகளுக்கு மேல் பெற்று ட்ரெண்ட் ஆகியுள்ளது.
View this post on Instagram
தந்தையாக இருப்பதே விருது
"எனது குட்டி இளவரசி இல்லாமல் எனது பட்டமளிப்பு விழா சிறப்பாக இருந்திருக்காது... அங்கு இருந்த அனைவருடனும் சேர்ந்து என் இதயம் உருகியது. பட்டமளிப்பை விட, தந்தையாக இருப்பதை விருதாக உணர்ந்தேன்” என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தங்கள் நாளையே இந்த வீடியோ அழகாக்கியுள்ளது என்றும் தாங்கள் கண்டு மகிழ்ந்த மிகச்சிறந்த தருணம் என்றும் உணர்ச்சிப் பெருக்குடன் இன்ஸ்டா பயனர்கள் கமெண்ட்ஸ் பகிர்ந்து இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்