French Wine Surplus: ஒயின் குடிப்பதை குறைத்துக்கொண்ட மக்கள்.. பிரான்ஸ் அரசு எடுத்த முடிவு என்ன தெரியுமா?
பிரான்ஸ் நாட்டில் மக்களிடையே ஒயின் நுகர்வு பெரும்பாலும் குறைந்திருப்பதால், உபரியாக உள்ள ஒயின்களை அழிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பல்வேறு காரணங்களால் ஐரோப்பிய யூனியன் மகாணங்களில் மக்கள் ஒயின் அருந்துவது குறைந்துள்ளது. ஒயின் பானத்திற்கான தேவையும் வெகுவாக குறைந்துள்ளது. அதிகளவில் ஒயின் உற்பத்தில் மற்றும் அந்நாட்டில் நிலவும் காஸ்ட் ஆஃப் லிவிங் பிரச்சனை உள்ளிட்டவை காரணமாக ஒயின் உற்பத்தி துறை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
குறைந்த ஒயின் பயன்பாடு:
ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் வரையிலான கணக்கெடுப்பின்படி, இத்தாலியில் 7%, ஸ்பெயினில் 10 %, பிரான்ஸ் 15%,, ஜெர்மனி 22% மற்றும் போர்ச்சுகல் 34% என்ற அளவில் ஒயின் நுகர்வு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு பொருளாதார ரீதியிலாக பல்வேறு துறைகளை பாதித்தது. அதற்கு ஒயின் உற்பத்தி துறையும் விதிவிலக்கல்ல. ரஷ்யா - உக்ரைன் போர் நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிரான்சிலும் போர் தாக்கம் ஏற்பட்டது. பல்வேறு காரணங்களால் பிரான்ஸில் ஒயின் உற்பத்தி ஆலைகள் கடுமையான வீழ்ச்சியையும் வளர்ச்சிக்கான பாதைகளில் சவால்களையும் சந்தித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒயினுக்கு பதில் பீர்:
பொதுமக்கள், சமீப காலங்களில் ஒயின்க்கு பதிலாக பீர் அருந்துவதை தேர்வுசெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒயின் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியாக கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட ஒயின் அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு உதவ அரசு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ. 200 யூரோ (171.6 மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங்) ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.1,782.29 கோடி ஆகும். இந்த நிதி மூலம் ஒயின் உற்பத்தியாளர்கள், ஆலிவ் எண்ணெய் உற்பத்தி பயன்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒயின் விலை சரிவு உள்ளிட்டவற்றை சரிசெய்யும் வரை அரசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
கூடுதல் உற்பத்தி செய்யப்பட்ட ஒயினை வாங்கி, அவற்றிலிருந்து பெறப்படும் ஆல்கஹாலை எடுத்து, , சானிடைசர்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு இந்த நிதியை பயன்படுத்தி கொள்ளாலம் என்று அரசு தெரிவித்துள்ளது.