ஒரே நாளில் 16 முறை சூரிய உதயம்.. ஆனாலும் இதுதான் நியூ இயர் ஃபர்ஸ்ட் - நாசாவின் வைரல் போட்டோஸ்!
சூரியனின் அழகான 4 புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. பலருக்கும் அது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நியூ இயர் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகில் பல நாடுகளும் வாணவேடிக்கைகள் நடத்தி கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றன. ஆனால் இணையத்தில் நாசா பகிர்ந்த புத்தாண்டு வைரலாகி வருகிறது. ஒரே நாளில் 16 முறை சூரிய உதயத்தை பார்த்தாலும் சரியான நேரத்தில் 2022ம் ஆண்டு நியூ இயர் கொண்டாடப்பட்டது என சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா பகிர்ந்துள்ளது. சூரியனின் அழகான 4 புகைப்படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. பலருக்கும் அது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அது எப்படி ஒரே நாளில் 16 சூரிய உதயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Happy New Year! The station crew sees 16 sunrises a day, and they officially started 2022 at 12am GMT. pic.twitter.com/ConanYAhPm
— International Space Station (@Space_Station) January 1, 2022
சர்வதேச விண்வெளி நிலையம்:
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமானது பூமியில் இருந்து 408 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளன.
இந்த நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுவது வழக்கம். விண்வெளி குறித்து ஒவ்வொரு தகவலும் நமக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகிறது. விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் அடிக்கடி அங்குள்ள நிலையை படம் பிடித்து அனுப்பி பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS), தொடர்ந்து பூமியை சுற்றி வருகிறது ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 முறை சூரியன் உதிக்கும்..
நாசா அளித்த தரவுகளின்படி, ISS (சர்வதேச விண்வெளி நிலையம்) 109 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலமும் கொண்டது, இது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் நீளத்தைப் போன்றது, அதன் எடை 420 டன். இது பூமியைச் சுற்றி அதிவேகத்தில் பயணிக்கிறது. ISS பூமியை ஒரு மணி நேரத்திற்கு இருபத்தேழாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது, இதனால் 90 நிமிடங்களில் ஒரு முழு வட்டத்தை சுற்றி முடிக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையம் தினமும் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது என்றும் இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 முறை சூரியன் உதிப்பதையும் மறைவதையும் காண்கின்றனர் என நாசா (NASA) தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்