“வாழ்க்கையில் சில நேரங்களில் இப்படித்தான்...” - கொரோனா அதிகரிப்பால் சொந்த திருமணத்தை நிறுத்திய நியூ., பிரதமர்
தினசரி கேஸ்கள் 70ஐ தாண்டியதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு நாடு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கேஸ்கள் அதிகரிக்காமல் இருக்க அரசாங்கம் அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர்.
உலகில் கொரோனாவை எதிர்கொண்டதில் சிறப்பாக செயல்பட்ட நாடு என்றால் அது நியூசிலாந்துதான் என்ற பெருமை உண்டு. மிக சாமர்த்தியமாக கொரோனாவை கட்டுப்படுத்தி அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனம் பெற்றார். உலக நாடுகள் பல நியூசிலாந்தின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளையும் அவர்கள் செய்த வழிமுறைகளையும் பின்பற்றும் வகையில் ஜெசிந்தா ஆர்டர்ன் சிறப்பாக செயல்பட்டார். அங்கு இதுவரை மொத்தமாக பதிவானதே 15,550 கேஸ்கள்தான். அந்நாட்டில் இதுவரை 52 பேர் பலியாகி உள்ளனர். தற்போது ஆக்டிவ் நோயாளிகள் 1,096 பேர் உள்ளனர். அங்கு கொரோனா பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திடீரென கடந்த ஒரு வாரமாக ஒமிக்ரான் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிச்சயதாா்த்தம் ஆனது. வரும் பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக ஜெசிந்தா அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வந்தன. அந்நாட்டு மக்களும் தங்கள் பிரதமரின் திருமணத்திற்காக காத்திருந்தனர்.
சமீபத்தில் அங்கு ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு ஒமிக்ரான் ஏற்பட்டது. இவர்கள் நியூசிலாந்தில் பல மாகாணங்களுக்கு திருமணம் உள்ளிட்ட பல விழாக்களில் கலந்து கொள்ள சென்றனர். இதனால் அங்கு புதிய கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. தினசரி கேஸ்கள் 70ஐ தாண்டியதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு நாடு முழு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கேஸ்கள் அதிகரிக்காமல் இருக்க அரசாங்கம் அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். இதையடுத்து தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை. பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன்." என்றார்
கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா , 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகு கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை. தடுப்பூசியால் கொரோனாவின் தீவிரத் தன்மை உலக அளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கொரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.