Coronavirus Death Worldwide: கொரோனாவுக்கு உலகளவில் 32.54 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 32.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 15 கோடியே 58 லட்சத்து 13 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 15 கோடியே 58 லட்சத்து 13 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 54 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 31 லட்சத்து 96 ஆயிரத்து 580 ஆக உள்ளது. ஒரு கோடியே 91 லட்சத்து 51 ஆயிரத்து 380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 295 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 45 ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 729 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 840 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 93 ஆயிரத்து 134 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் ஒரே நாளில் 75 ஆயிரத்து 652 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 791 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 49 லட்சத்து 36 ஆயிரத்து 464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 14 ஆயிரத்து 645 யை கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் நேற்று கொரோனா தொற்றால் 15 கோடியே 49 லட்சத்து 68 ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 40 ஆயிரத்து 597 ஆக அதிகரித்தது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரத்து 554 ஆக இருந்தது. ஒரு கோடியே 91 லட்சத்து 94 ஆயிரத்து 803 பேர் சிகிச்சை பெற்றனர்.
இந்தியாவில் நேற்று 3,82,847 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 51,880 பாதிப்புகள் கண்டறியப்பட்டது.
இருப்பினும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமான முறையில் குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 29ம் தேதி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 66,159 ஆக இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 48,621ஆகவும், திங்கட்கிழமை 51,880 ஆகவும் உள்ளது.