மேலும் அறிய

China's 10G Internet: சீனா ஜி, சண்டைக்கு நடுல சாதனை பண்ணிட்டீங்களே ஜி.. 10ஜி இன்டர்நெட் சேவை.. என்னா ஸ்பீடு தெரியுமா.?

அமெரிக்காவுடன் ஒருபுறம் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்துள்ளது சீனா. ஆம், உலகின் முதல் 10ஜி இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் வரி விதிப்பில் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் சீனா, உலக நாடுகள் யாரும் செய்யதாக ஒரு சாதனையை சத்தமில்லாமல் செய்துள்ளது. சீனாவில், 10ஜி பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்துள்ளது சீனா. அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

அத்தியாவசியமாக மாறிப்போன இன்டர்நெட் சேவை

உலகெங்கிலும், மக்களின் அத்தியாவசிய தேவை என்ன என்று கேட்டால், முன்பெல்லாம் உண்ண உணவு, இருக்க இடம், படுக்க பாய் என்று கூறுவார்கள். ஆனால், அந்த லிஸ்ட்டில் தற்போது இன்னொரு விஷயமும் இணைந்துள்ளது. ஆம், இணையம்தான். ஒரு போன் மற்றும் இணைய சேவை என்பது தற்போது கூடுதல் பதிலாக இருக்கும். அந்த அளவிற்கு, இன்று மக்களின் அத்தியாவசிய தேவையாக கைபேசியும், இன்டர்நெட் சேவையும் மாறிவிட்டது.

அதிலும், இன்டர்நெட்டின் வேகமும் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. உலக அளவில் இதுவரை இந்தியா உள்ளிட்ட அதிகமான நாடுகளில் 5ஜி வேகம் வரைதான் இணைய சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், இணைய உலகில் சீனா சத்தமில்லாமல் ஒரு சாதனையை புரிந்துள்ளது.

10ஜி சேவையை அறிமுகப்படுத்திய சீனா

ஒருபுறம் அமெரிக்கா உடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மறுபுறம் ஒரு மாபெரும் சாதனையை சீனா படைத்துள்ளது. ஆம், அதுதான் 10ஜி இணைய சேவை. சீனாவின் ஹூவேய் மற்றும் சீன யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து, 10ஜி பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகம் செய்துள்ளன.

முதற்கட்டமாக சீனாவின் பீஜிங் அருகே, ஹூபே மாகாணத்தில் உள்ள சுனான் கவுண்டி என்ற பகுதியில், 9,834 எம்பிபிஎஸ்(Mbps) வேகத்தில் பதிவிறக்கம் மற்றும் 1008 எம்பிபிஎஸ்(Mbps) பதிவேற்றும் திறன் கொண்ட 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்னல் வேக இன்டர்நெட்டை வழங்கும் இந்த 10ஜி நெட்வொர்க் சேவையை, விரைவில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உலகெங்கும் அதிவேக இன்டர்நெட் சேவை வழங்குவதில் ஆப்டிகல் ஃபைபர் கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பமான 50G PON (Passive Optical Network) கட்டமைப்பில் இந்த 10ஜி சேவை வழங்கப்படுகிறது.

இதன் மூலம், 10ஜிபி வேகத்தில் இணைய சேவை கிடைப்பதால், சுமார் இரண்டரை ஜிபி அளவு கொண்ட 4 ஃபைல்களை ஒரே நொடியில் பதிவிறக்கம், அதாவது டவுன்லோட் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
மிடில் கிளாஸ் பேமிலிக்கு குட் நியூஸ்; கான்கிரீட் வீடு திட்டத்திற்கு மானியம் ரூ.5 லட்சமாக உயர்வு - அமைச்சர் மரிய வில்சன்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
Embed widget