மேலும் அறிய

Watch Video: 12 நாட்கள் ஒரே இடத்தை வட்டமடித்த ஆடுகள்...! சீனாவில் நிகழ்ந்த அமானுஷ்யம்..

சீனாவில் ஒரே இடத்தில் தொடர்ந்து 12 நாட்கள் செம்மறி ஆடுகள் வட்டமிட்ட, விசித்திரமான செயல் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அறிவியலின் பெரு வளர்ச்சியால் புவியில் அதிதிறன் வாய்ந்த உயிரினமாக, மனிதகுலம் இருந்தாலும் எண்ணற்ற கேள்விகளுக்கு இன்னும் நம்மிடம் பதில் இல்லை என்பதே உண்மை. அவ்வப்போது நிகழும் பல்வேறு அமானுஷ்ய சம்பவங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாக உள்ளன. அந்த வகையில் தான் என்ன காரணமென்றே தெரியாமல், நூற்றுக்கணக்கான ஆடுகள் தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் வட்டமடித்த சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.  

ஆட்டுத் தொழுவம்: 

அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மங்கோலியாவில் அமைந்துள்ள ஒரு ஆட்டு தொழுவத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு மொத்தம்  35 ஆட்டு தொழுவங்கள் இருந்தாலும், 13ம் எண் தொழுவத்தில் உள்ள ஆடுகள் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இடைவிடமால் ஒரே இடத்தை சுற்றி வட்டமடித்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்களில் இரவு பகல் பாராமால் பல்வேறு ஆடுகள் தொடர்ந்து ஒரே இடத்தை பெரிய வட்ட வடிவில் சுற்றியுள்ளன. ஒரு சில ஆடுகள் கூட்டத்தை விட்டு வெளியே சென்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தாலும், ஏராளமான ஆடுகள் இடைவிடாது சுற்றியுள்ளன.

இதுதொடர்பாக பேசிய தொழுவத்தின் உரிமையாளர், கடந்த 4ம் தேதி முதலில்  ஒரு சில ஆடுகள் இவ்வாறு சுற்றத் தொடங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து பிற ஆடுகளும் சேர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து 12 நாட்கள் ஆடுகள் இவ்வாறு வட்டமடித்ததாகவும், ஆடுகள் அனைத்தும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.  சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆடுகளின் விசித்திரமான செயல்பாட்டுக்கு காரணம் என்ன என்று பலரும் குழம்பி வருகின்றனர்.  சிலர் இது வேற்றுகிரக வாசிகளின் செயலாக இருக்கலாம் என்றும், மேலும் சிலர் இது ஒரு அமானுஷ்ய நிகழ்வு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காரணம் என்ன..?

அதே சமயம் ஆடுகளின் இந்த விநோத நடவடிக்கைக்கு "லிஸ்டீரொயோசிஸ்" என்ற பாக்டீரியா நோய் தொற்று தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாக்டீரியா  ஆடுகளின்  மூளையின் ஒரு பகுதியை தாக்குவதால், அவற்றிற்கு  பசியின்மை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுடன் மூளையின் பாதிக்கப்பட்ட பக்கத்தை நோக்கி வட்டமிடும் இயல்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. தரம் குறைந்த அல்லது கெட்டுப்போன தீவனங்களை உண்பதால் ஆடுகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. லிஸ்டீரொயோசிஸ் தொற்றின் அறிகுறிகள் தெரிந்தால் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆடுகள் உயிரிழந்து விடும் எனவும், இதில் அமானுஷ்யம் என்று எதுவும் இல்லை எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

US Iran Israel War: அடிக்கு அடி தான்..! அடுத்த கட்டத்துக்கு போயாச்சு - ஈரான் வார்னிங், ரொம்ப மோசம் என ட்ரம்ப் கவலை
US Iran Israel War: அடிக்கு அடி தான்..! அடுத்த கட்டத்துக்கு போயாச்சு - ஈரான் வார்னிங், ரொம்ப மோசம் என ட்ரம்ப் கவலை
ஹார்மூஸை திறந்தாலும் கட்டுப்பாடு இருக்கு.. ட்விஸ்ட் கொடுத்த ஈரான்! ஒரு நாளைக்கு எத்தனை கப்பல்கள் அனுமதிக்கப்படும்?
ஹார்மூஸை திறந்தாலும் கட்டுப்பாடு இருக்கு.. ட்விஸ்ட் கொடுத்த ஈரான்! ஒரு நாளைக்கு எத்தனை கப்பல்கள் அனுமதிக்கப்படும்?
Hormuz Toll Tax: கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
கச்சா எண்ணெய்; ஈரான் வசூல் வேட்டை; ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் சுங்கக் கட்டணம்; ஒரு கப்பலில் எத்தனை.?
Beach Killer: சைக்கோ கொலைகாரன் - 8 பெண்களை கொன்று, உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி வீசி கொடூரம்
Beach Killer: சைக்கோ கொலைகாரன் - 8 பெண்களை கொன்று, உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி வீசி கொடூரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மேடையை விட்டு இறங்க மாட்டார்" விமர்சனம் செய்த அன்புமணி; களத்தில் இறங்கி பதிலடி கொடுத்த விஜய்
TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
Flying Flea C6 Review: புதிய சகாப்தத்தில் ராயல் என்ஃபீல்டு: பறக்கும் பைக்- பர்ஃபார்மென்ஸ் எப்படி? ஃபுல் ரிவ்யூ!
Flying Flea C6 Review: புதிய சகாப்தத்தில் ராயல் என்ஃபீல்டு: பறக்கும் பைக்- பர்ஃபார்மென்ஸ் எப்படி? ஃபுல் ரிவ்யூ!
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
’’பள்ளிகள்கூட பாதுகாப்பில்லை; பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது’’- அன்புமணி கண்டனம்
’’பள்ளிகள்கூட பாதுகாப்பில்லை; பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது’’- அன்புமணி கண்டனம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
Embed widget