Bald: வழுக்கைத் தலையை கிண்டல் செய்தால் பாலியல் குற்றம் - அதிரடி தீர்ப்பளித்த தீர்ப்பாயம் !
அலுவலகத்தில் சொட்டை என்று கூறுவது பாலின பாகுபாடுகளில் ஒன்று தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் அவ்வப்போது சில வழக்குகள் மிகவும் முக்கியத்துவம் பெரும் வகையில் அமைந்திருக்கும். அப்படி ஒரு வழக்கு தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதாவது அலுவலகத்தில் ஒருவரின் வழுக்கைத் தலையை கிண்டல் செய்தாலோ அல்லது சொட்டை என்று அழைத்தாலோ பாலின பாகுபாடுகளில் ஒன்று என்று வேலை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அதாவது அது பாலியல் குற்றமாக பாவிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
லண்டன் நாட்டிலுள்ள வேலை தொடர்பான தீர்ப்பாயத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வழக்கு ஒன்று நடைபெற்று வந்துள்ளது. டோனி ஃபின் என்ற நபர் மேற்கு யார்க்ஷரிலுள்ள நிறுவனம் ஒன்றில் 24 ஆண்டுகளாக பணி புரிந்து வந்துள்ளார். அவரை 2019ஆம் ஆண்டு திடீரென்று அந்த நிறுவனம் பணியிலிருந்து எடுத்துள்ளது. மேலும் அவரை அங்கு இருந்த உயர் அதிகாரி ஒருவர் மிகவும் மோசமாக நடத்தியுள்ளதாக தெரிகிறது.
தன்னுடைய திடீர் வேலை இழப்பு மற்றும் தனக்கு நேர்ந்த பிரச்னை தொடர்பாக இவர் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி அலுவலகத்தில் ஒருவரை சொட்டை என்று குறிப்பிடுவது பாலின பாகுபாடுகளில் ஒன்றாகும். ஒருவரைய முடி, தோற்றம் ஆகியவற்றை குறிப்பிடுவது மிகவும் தவறான ஒன்று என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் திடீரென அந்த நபரை பணியைவிட்டு நீக்கியதற்கும் இந்த மன உளைச்சலுக்கும் உரிய இழப்பீடு வழங்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீடு தொடர்பாக தீர்ப்பாயம் விரைவில் விரிவாக தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 2019ஆம் ஆண்டு அந்த நபர் அலுவலகத்தில் பணியாற்றிய போது, அவர் தன்னுடைய பிரிவிலுள்ள இயந்திரம் பழுது அடைந்திருந்தால் பணியை தொடர முடியாமல் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் இவர் செய்யும் வேலையை பார்த்து வயசான காலத்தில் இப்படி சரியாக வேலை செய்யாமல் இருந்து கொண்டு இருக்கிறார் என்று கூறி அவருடைய வழுக்கை தொடர்பாகவும் கூறி திட்டியுள்ளார். அதன்பின்னர் டோனி ஃபின்னை பணியிலிருந்து நீக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த டோனி ஃபின் தீர்ப்பாயத்தில் வழக்கை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்