மேலும் அறிய

உடலுறவின் போது ஆணுறையை அகற்றினால் குற்றம்... துணைவி அனுமதி அவசியம்... புதிய சட்டம்!

ஆஸ்திரேலியாவில் நடந்த ஆய்வில் 34% பெண்களும், 20% ஆண்களும் உடலுறவின் போது தங்கள் துணையால் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

உடலுறவின் போது அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவதை குற்றம் என அறிவிக்கும் புதிய சட்டத்திருத்தம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொண்டு வரப்பட உள்ளது. அதுபோன்ற செயலில் ஈடுபட்டு, துணை புகார் செய்தால் பாலியல் பலாத்காரத்துக்கு இணையாக குற்றம் என கருத இச்சட்டம் வகை செய்கிறது.

ஆணுறை அணிந்துகொண்டு உடலுறவில் ஈடுபடும்போது துணையின் அனுமதிபெறாமல் அதை அகற்றுவதை STEALTHING என அழைக்கப்படுகிறது. ஆண்கள் STEALTHING இல் அதிகம் ஈடுபடுவதால் இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பெண்ணிய அமைப்புகள் குரல் எழுப்பினர். அதன் படி புதிய சட்டத் திருத்தத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு ஈடுபட்டு இருந்தது. அது முழுவடிவம் பெற்று செவ்வாய்க்கிழமை கலிபோர்னியா சட்டமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

AB 453 என்ற இந்த புதிய சட்ட மசோதாவுக்கு கலிபோர்னியா ஆளுநர் ஒப்புதல் அளித்தால், இது முழுமையான சட்ட வடிவம் பெறும். அதுமட்டுமின்றி அமெரிக்காவிலேயே STEALTHING இற்கு எதிராக சட்டம் கொண்டு வரும் முதல் மாகாணம் கலிபோர்னியா தான். இச்சட்டத்தின் கீழ் ஆணுறையை துணை ஒருவர் அகற்றினால் அது சட்டப்படி குற்றமாக கருதப்படும். இது குறித்து துணை புகார் அளிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கேட்க முடியும்.

துணையின் ஒப்புதல் இன்றி ஆணுறையை அகற்றும் செயலை சட்ட ரீதியாகத் தடுக்க 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர், ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினரான கிறிஸ்டினா கார்சியா. இவர் கூறுகையில், ”உடலுறவின்போது துணைக்கு தெரியாமல் எப்படி ஆணுறையை அகற்றுவது என்பது குறித்த யோசனைகளை பல வெளிப்படையாக தெரிவித்து வந்ததை பார்த்தவுடன் எனக்கு வெறுப்பை ஏற்பட்டது. துணையின் அனுமதி இன்றி, ஆணுறையை அகற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதை தடுக்க இதுவரை சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது. இத்தகையச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது தண்டனை பெற்றுத் தரும் வரை ஓய மாட்டேன்.” என்றார்.

உடலுறவின் போது ஆணுறையை அகற்றினால் குற்றம்... துணைவி அனுமதி அவசியம்... புதிய சட்டம்!

இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் செக்‌ஷுவல் ஹெல்த் செண்டர் நடத்திய ஆய்வில், 34 சதவீதம் பெண்களும், 20 சதவீதம் ஆண்களும் உடலுறவின் போது தங்கள் துணையால் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். குறிப்பாக இதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதனை பாலின உரிமை மீறலாகவும், பாலியல் பலாத்காரமாகவுமே பார்க்க வேண்டும் என பல நாடுகளை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதனை குற்றமாக அறிவிக்கும் சட்டத்தை கொண்டு வந்து உள்ளது  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்.

தலைப்பு செய்திகள்

Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Embed widget