Watch Video: கூண்டுக்குள் விரல்வித்தைக் காட்டிய நபர்! படாரென பாய்ந்து விரலைக் கடித்துத் துப்பிய சிங்கம்!
பார்வையாளர்கள் சுதாரிப்பதற்குள் விரலைக் கடித்துத் துப்பி கீழே போட்டு நசுக்கியது சிங்கம்.
ஜமாய்க்காவின் ஒரு வனவிலங்கு சரணாலயப் பராமரிப்பாளரின் கைவிரலை சிங்கம் ஒன்று கடித்துத் துப்பிய சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கையை சிங்கம் இருக்கும் கூண்டுக்குள் விட்டு பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த அவரது கைவிரலை சிங்கம் ஒன்று கவ்விக் கொண்டது. பார்வையாளர்கள் சுதாரிப்பதற்குள் விரலைக் கடித்துத் துப்பி கீழே போட்டு நசுக்கியது சிங்கம்.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், ஜமாய்க்கா மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் பராமரிப்பாளர் சுமார் 15 பார்வையாளர்களுக்கு முன்னால் சங்கிலி இணைக்கப்பட்ட கூண்டில் தனது விரலை உள்ளே விடுவதைக் காணலாம்.
அவர் சிங்கத்தை அலட்சியம் செய்யும் போக்கில் நடந்துகொள்கிறார்.அதன் முன்பு சத்தமாகக் கைதட்டுகிறார். இதனால் கோபமடையும் சிங்கம் அவரது விரலைக் கவ்வுகிறது.சிங்கத்தின் தாடையில் இருந்து தன் விரலை வெளியே இழுக்க மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர் தீவிரமாக முயற்சித்தபோது, அது முழுவதுமாக துண்டிக்கப்பட்டு அவர் பின்னோக்கி விழுவதை திகிலடைந்த கூட்டம் பார்க்கிறது.
Show off bring disgrace
— Ms blunt from shi born 🇯🇲 “PRJEFE” (@OneciaG) May 21, 2022
The lion at Jamaica Zoo ripped his finger off. pic.twitter.com/Ae2FRQHunk
அதிர்ச்சியடைந்த ஒரு பார்வையாளர் கூறுகையில்: “அது நடந்தபோது, அது ஒரு நகைச்சுவை என்று நான் நினைத்தேன். அவர் அலறிக் கொண்டு கதறும் வரை அந்தச் சம்பவத்தின் தீவிரத்தை நான் உணரவில்லை. வெளிப்படையாக, அவர் தரையில் விழுந்தபோது அங்கே என்ன நடந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர். பின்னர் எல்லோரும் பீதியடைய ஆரம்பித்தார்கள்”
சிங்கம் தாக்கிய பிறகு கீழே விழுந்த பாதுகாவலர் பின்னர் எந்தச் சலனமும் இல்லாமல் எழுந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஜமாய்க்காவின் சாண்டா குரூஸ் அருகே அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் வரிக்குதிரைகள், குரங்குகள், முதலைகள் மற்றும் லாமாக்கள் உள்ளன.
மிருகக்காட்சிசாலையின் பிரதிநிதிகள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறினர், ஆனால் ஜமாய்க்காவில் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சங்கம் தாங்கள் இதுதொடர்பாக விசாரணை செய்வதை உறுதிப்படுத்தியது.அதன் நிர்வாக இயக்குனர் பமீலா லாசன் கூறுகையில்: "இதுதொடர்பாக மிருகக்காட்சி சாலையைப் பராமரிக்கும் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் திட்டமிடல் நிறுவனத்தை நாங்கள் தொடர்புகொண்டுள்ளோம். இதையடுத்து அங்கே செல்வதாக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.