மேலும் அறிய

ரஷ்யாவை தடுக்க முடியாது; புதின் உலகை ஆள்வார் - வைரலாகும் பாபா வாங்காவின் கணிப்பு!

பாபா வங்கா கணிப்புகளின் படி, 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை என கணித்தார்.  அதுவும் நடந்தது. இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பு பரவலாக பேசப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதின்  உலகை ஆள்வார் என்றும் பாபா வாங்காவின் (Baba Wanga)  கணிப்பு வைரலாகி வருகிறது. 

பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. பாபா வாங்கா பல்கேரிய நாஸ்டர்டாமாக கருதப்படுகிறார். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தவர். இவருக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் இருக்கிறது. 84 வயதில் பாபா வங்கா காலமானார். அவருடைய வாழ்நாளில் அவர் கணித்த 85 சதவீத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  அமெரிக்காவின் 9/11 வர்த்தக கோபுர தாக்குதல், 2022ம் ஆண்டு புதுவித வைரஸ் தாக்குதல் ஏற்படும், என பல விஷயங்களை முன்கூட்டியே கணித்துள்ளார்.

இந்நிலையில் எழுத்தாளர் வாலண்டின் சிடோரோவிடம் தெரிவித்திருந்த கணிப்பு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா வங்கா இறப்பதற்கு முன்பு தெரிவித்த கணிப்புகளின் படி, ரஷ்யா உலகின் வல்லரசாக மாறும் என்பது போன்றவைகளை கணித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார், 2016-ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் எனவும்  கணித்தார்.  இதைத் தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என்றும் பாபா வாங்கா கணித்தார். அதுவும் நடந்தது. இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பு பரவலாக பேசப்படுகிறது.

குறிப்பாக ஐரோப்பா அதன் தற்போதைய வடிவத்தில் இருக்காது என்று அவர் கணித்திருந்தார். அதன்பின்னர், 2016ம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.

ஆகஸ்ட் 1999ல் ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான குர்ஸ்க் கடலில் மூழ்கும் என்றும், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதையும் கணித்திருந்தார்.

பாபா வங்கா குறித்து  எழுத்தாளர் வாலண்டைன் சிடோரோவிடம் கூறுகையில், எல்லாம் பனிக்கட்டி போல உருகிவிடும். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிலைத்திருக்கும். அது விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை. அதனை யாராலும் தடுக்க முடியாது, ரஷ்யா உலகின் அதிபதி ஆகிவிடும்  என பாபா வாங்கா கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா உலக நாடுகளை தன் வசப்படுத்தும் நாடாக மாறும். ஐரோப்பா ஒன்றும் இல்லாத நாடாக மாறும் என்றும் வாங்கா கணித்திருந்தார்.

பாபா வாங்கா 5079 ஆம் ஆண்டு வரை உலகில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து கணித்து வைத்துள்ளார். இவருடைய கணிப்புகள் மீது மக்களுக்குத் தனி நம்பிக்கை உண்டு.

தலைப்பு செய்திகள்

Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget