22 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த பாலியல் வன்கொடுமை.. குற்றவாளி சிக்கியது எப்படி?
22 ஆண்டுகளுக்கு முன்பாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் தற்போது காவல்துறையில் சிக்கியுள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக பல புகார்கள் எழுந்துகொண்டே தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மீடூ உள்ளிட்ட சில இயக்கங்கள் வந்த பிறகு நீண்ட நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற பாலியல் சம்பவங்கள் தொடர்பாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் வெளியே வந்துள்ளது. அந்த சம்பவம் தற்போது எப்படி வெளியே வந்தது?
பிரிட்டனின் பன்பெரி பகுதியைச் சேர்ந்தவர் பிரிங்கில்(63). இந்த நபர் தொடர்பாக அண்மையில் குழந்தைகளுக்கு இவர் பாலியல் தொல்லை தருவதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து அவரை கண்காணிக்கும் வகையில் ஒரு ஃபேஸ்புக் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கணக்கு ஒரு சிறுமி உடையது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரிங்கில் முதலில் பதில் செய்தி அனுப்பியுள்ளார். அதன்பின்பு ஒரு 10 நாட்களுக்கு பிறகு ஒரு சிறுமியின் மார்பு பகுதி வரை படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார். அந்தச் செய்தியை வைத்து இவரை மடக்கிய நபர்கள் ஃபேஸ்புக் லைவ் செய்து இவரை பிடித்து காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்த ஃபேஸ்புக் லைவ் தொடர்பான செய்தியை பார்த்த பெண் ஒருவர் இந்த நபர் குறித்து ஒரு புகாரை அளித்துள்ளார். அதன்படி சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிங்கில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார். அதாவது அந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது இவர் தினமும் பள்ளிக்கும் செல்லும் வழியில் பார்த்து நண்பராக முயற்சி செய்துள்ளார். அத்துடன் பல முறை இவருக்கு தேவையான இனிப்பு மற்றும் ஐஸ்க்ரீம் ஆகியவை வாங்கி கொடுத்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
மேலும் அவருடைய வீட்டில் வைத்து சிறுமியாக இருந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய பல முறை கொடுமை செய்துள்ளார். அத்துடன் அவரிடம் இது ஒரு சாதாரணமான விஷயம் இதைப் பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என்றும் கூறியுள்ளார். இந்தப் பெண் வளர்ந்த பிறகு அவரால் கண்டறிய முடியவில்லை. 22 ஆண்டுகளுக்கு இந்த ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலம் அவரை கண்டறிந்து தன்னுடைய புகாரை அப்பெண் அளித்துள்ளார். இந்த இரண்டு புகார்கள் தொடர்பாகவும் பிரிங்கில் இடம் விசாரிக்கப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து 13 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் படிக்க: ”எனக்கு அதிர்ச்சியா இருந்தது...” ஓமிக்ரான் வகை கொரோனாவை கண்டுபிடித்த மருத்துவர் அதிர்ச்சி தகவல்