தன்னை தானே திருமணம் செய்த மாடல் அழகி... தற்போது அவரே அவரை விவாகரத்து செய்தார்!
மாடல் அழகி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் வைரலானது.
பொதுவாக ஆண்-பெண் திருமணம் அல்லது பெண்-பெண் அல்லது ஆண்-ஆண் திருமணம் குறித்து உலகம் முழுவதும் நாம் அதிகம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்த கொண்ட செய்தி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. அந்த திருமணத்திற்கு அவர் கூறிய விளக்கமும் பெரியளவில் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட 90 நாட்களுக்குள் அவர் தன்னுடைய திருமணத்திற்கு விவாகரத்தை கேட்டுள்ளார். இதற்கும் அவர் பாணியில் ஒரு புதிய காரணத்தை கூறியுள்ளார். பிரசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கிறிஸ் கலேரா. 31 வயதான இவர் கடந்த செப்டம்பர் மாதம், “தனக்கு எந்த ஒரு ஆண்மகனும் திருமணம் செய்ய கிடைக்கவில்லை. எனக்கு தனியாக வாழ்வது சற்று பயமாக இருந்தது. ஆனால் அது தற்போது பழகிய ஒன்றாக மாறியுள்ளது. ஆகவே நானே என்னை பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன் “ எனக் கூறினார். அத்துடன் தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.
View this post on Instagram
இந்தச் சூழலில் தற்போது அவர் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு தற்போது காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது. நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துள்ளேன். அதற்கு பிறகு தான் இந்த நம்பிக்கை எனக்குள் வந்துள்ளது. ஆகவே நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னை தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக கூறி பிறகு 90 நாட்களுக்குள் அதற்கு விவாகரத்து என்று கூறியுள்ளது பெரும் பரப்பர்ப்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கருப்பான் பூச்சினா உலகம் முழுவதும் பயம் தானா...- வைரல் வீடியோ !