உலகின் புதிய நம்பர் 1 பணக்காரர்...எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட் அர்னால்ட்...யார் இவர்..?
இவரின் சொத்து மதிப்பு 188.6 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
எல்.வி.எம்.ஹெச் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட் உலகின் புதிய நம்பர் 1 பணக்காரராக உருவெடுத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 188.6 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
ட்விட்டரை சமீபத்தில் வாங்கிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார் பெர்னார்ட் அர்னால்ட். ஃபோர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 178.6 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தொழிலதிபர்:
1949ஆம் ஆண்டு, வடக்கு பிரான்சில் பிறந்தவர் பெர்னார்ட் அர்னால்ட். எகோல் பாலிடெக்னிக்கில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், ஃபெரெட் சாவினல் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். 1981இல் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்து ரியல் எஸ்டேட் துறையில் தொழிலை தொடங்கினார்.
1984இல் பிரான்சுக்குத் திரும்பிய அர்னால்ட், கிறிஸ்டியன் டியருக்கு சொந்தமான வங்கியால் திவாலானதாக அறிவிக்கப்பட்ட Boussac Saint-Freres என்ற ஜவுளி நிறுவனத்தை வாங்கினார்.
பின்னர், அந்நிறுவனத்தின் மற்ற தொழில் நிறுவனங்களை விற்று, அதில் கிடைத்த பணத்தின் மூலம் எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கினார். இதை தொடர்ந்து, லூயிஸ் உய்ட்டன் மற்றும் மோட் ஹென்னெஸி ஆகிய அதன் இரண்டு முக்கிய நிறுவனங்களை எல்விஎம்ஹெச் இணைத்தது.
எல்விஎம்ஹெச் நிறுவனத்தை சொகுசு குழுமமாக மாற்றினார் அர்னால்ட். பின்னர், லூயிஸ் உய்ட்டன், செஃபோரா மற்றும் 70 பிற பேஷன் அழகு வணிக நிறுவனங்கள் அனைத்தும் எல்விஎம்ஹெச் குழுமத்தின் பெர்னார்ட் அர்னால்ட்டின் வழிகாட்டுதலின் கீழ் வந்தது.
Commandeur des Arts et des Lettres, gion d'Honneur ஆகிய மதிப்புமிக்க விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
World's Top 10 Richest People:
— World Index (@theworldindex) December 14, 2022
1.🇫🇷Bernard Arnault: $171b
2.🇺🇸Elon Musk: $164b
3.🇮🇳Gautam Adani: $125b
4.🇺🇸Jeff Bezos: $116b
5.🇺🇸Bill Gates: $116b
6.🇺🇸Warren Buffet: $108b
7.🇺🇸Larry Ellison: $92b
8.🇺🇸Steve Ballmer: $90b
9.🇮🇳Mukesh Ambani: $89b
10.🇺🇸Larry Page: $88b
(Bloomberg)
ஷாம்பெயின், ஒயின், ஸ்பிரிட்ஸ், ஃபேஷன், தோல் பொருட்கள், கடிகாரங்கள், நகைகள், ஹோட்டல் தங்குமிடங்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது எல்விஎம்ஹெச். உலகம் முழுவதும் 5,500 கடைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
எலான் மஸ்க் போல, இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவானவர் அல்ல. இவரின் 5 பிள்ளைகளில் 4 பேர் எல்விஎம்ஹெச் குழுமத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.