America: ஈவு இரக்கமின்றி கறுப்பின இளைஞரை அடித்தே கொன்ற போலீசார்..! அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்..!
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கறுப்பின இளைஞரை போலீசார் அடித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
America :போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கறுப்பின இளைஞரை போலீசார் அடித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் கொடூரம்
அமெரிக்கா டென்னெஸ்ஸி மாகாணம் மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்தவர் டயர் நிக்கோலஸ் (29). கறுப்பினத்தைச் சேர்ந்தவரான இவர் கடந்த 7ஆம் தேதி இரவு தனது தாயாருக்கு மருந்துகள் வாங்க காரில் மெம்ஃபிஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ரெட் சிக்னலை மீறி அவர் சென்றுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் தங்கள் வாகனத்தில் அவரை பின் தொடர்ந்தனர்.
இதனை பார்த்த நிக்கோலஸ் காரை நிறுத்திவிட்டு ஓடத் தொடங்கினார். அவரை பின்தொடர்ந்த போலீசார் அவர் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொடூர செயலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், மின்சாரம் பாய்ந்ததால் மயங்கி விழுந்த நிக்கோலஸின் இடத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு ஓரளவு சுயநினைவுடன் இருந்தார் டயர் நிக்கோலஸ். பின்பு, அவரின் முகத்தில் பூட்ஸ் காலால் சரமாரியாக எட்டி உதைத்தனர். சிக்னலை மீறிய ஆத்திரத்தில் போலீசார் அவரை கடுமையாக தாக்கினர்.
சரமாரி தாக்குதல்:
சிறிது நேரம் கழித்து நிக்கோலஸை சாலையோர சுவரில் சாய்ந்தப்படி அமர வைத்து, போலீசார் 6 பேரும் ஒருவர் மாற்றி ஒருவராக அவரை கடுமையாக அடித்துள்ளனர். இதனால் நிக்கோலஸ் வலி தாங்க முடியாமல் ’அம்மா அம்மா' என்று கதறியுள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருந்த போலீசார் அவரை படுக்க வைத்து அவர் மேல் ஏறி முகத்தில் பலமாக குத்தினர். இதனால் அவருக்கு மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து, சுயநினைவை இழந்தார்.
இளைஞர் உயிரிழப்பு
இதனால் பலத்த காயமடைந்து சுயநினைவை இழந்த நிக்கோலஸை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிசிக்சை பெற்று வந்த நிக்கோலஸ் சிகிச்சை பலனின்றி கடந்த 10ஆம் தேதி உயிரிழந்தார். இதற்கிடையில், நிக்கோலஸை போலீசார் தாக்கும் வீடியோவை இணையத்தில் வெளியாகியது.
Unlike in the case of George Floyd…
— Avi Yemini (@OzraeliAvi) January 28, 2023
Tyre Nichols was murdered.
And every single one of these cops needs to be held accountable.
pic.twitter.com/xkwwlz3nE1
இதுபோன்று மிருகத்தனமாக நடந்து கொண்ட போலீசார் 6 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைராகி வந்தது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற மிருகத்தனமாக செயல்படும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜார்ஜ் பிளாய்ட்:
முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு மினியோபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதுடைய நபர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஒரு நாள் சந்தேகத்தின்பேரில் பிளாயை பிடித்து கடுமையாக அடித்ததில் அவருக்கு மூச்சுதினறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு கைதாகினர். இதே போன்று தற்போது நடந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.