மேலும் அறிய

Apple Watch | விபத்தில் சிக்கிய இளைஞர்.. ஆம்புலன்ஸை அழைத்த ஆப்பிள் வாட்ச்.. நடந்தது இதுதான்!

விபத்து நேர்ந்து வாட்ச்சிலிருந்து அலாரம் அடித்ததும் அதனை அவர் ஆஃப் செய்யவோ, அதற்கு எதிர்வினையாற்றவோ செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் ஆப்பிள் வாட்ச் ஒன்று இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

24 வயதான முகம்மது ஃபித்ரி என்ற இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வேனால் இடிக்கப்பட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் ஆட்கள் யாரும் இல்லாத சூழலில், அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் எமெர்ஜென்சி சர்வீஸிற்கு விபத்து தொடர்பாக தகவல் அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது. 

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களில் இதய துடிப்பு, நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைக் கண்காணிக்கும் வசதி உள்ளது. குறிப்பாக ஆப்பிள் சீரீஸ் 4 வாட்ச்களில், விபத்தின் காரணமாக ஒருவர் கீழே விழும்போது அதனைக் கண்காணித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் வசதியும் (fall detection feature) உள்ளது. அதன்படி வாட்ச்சை கட்டியிருப்பவர் கீழே விழுந்தால் அதிலிருந்து ஒரு அலாரம் அடிக்கும். வாட்ச்சைப் பயன்படுத்துபவர் நல்ல நிலையில் இருந்தால் அதனை டிஸ்மிஸ் செய்துக் கொள்ளலாம். அப்படி அவரிடமிருந்து அந்த அலாரம்மிற்கு எந்த பதிலும் இல்லையென்றால், வாட்ச்சில் ஏற்கெனவே அவசரத் தேவைகளுக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்களுக்கு தானகாவே விபத்து தொடர்பாகவும், விபத்து நேர்ந்த இடம் தொடர்பாகவும் மெசேஜ் சென்றுவிடும். அதுதவிர, பக்கத்தில் இருக்கிற எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ் செர்விஸ்களுக்கும் மெசேஜ் அனுப்பப்படும். அதன்மூலம் விபத்து நேர்ந்த சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

இந்நிலையில்தான் சிங்கப்பூரை சேர்ந்த இளைஞர் முகம்மது ஃபிர்த்தி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அணிந்துள்ளார். விபத்து நேர்ந்து வாட்ச்சிலிருந்து அலாரம் அடித்ததும் அதனை அவர் ஆஃப் செய்யவோ, அதற்கு எதிர்வினையாற்றவோ செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவருடைய எமர்ஜென்சி காண்டேக்ட் நம்பர்களுக்கு விபத்து தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விபத்து நேர்ந்த இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் விரைவாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். அறிவியல் எல்லாரது வாழ்விலும் முக்கியமான பங்கினை வகுத்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதே போன்ற சம்பவம் கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவிலும் நடைபெற்றது. வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர், மயக்கமுற்று கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்து எந்த அசைவும் இல்லாத சூழலில் அடுத்த ஒரு நிமிடத்திற்குள்ளாக அவசர எண்களுக்கு செய்தி அனுப்பப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget