மேலும் அறிய

அதிபர் பைடனின் மகனுக்கு வந்த சிக்கல்.. குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம்.. அமெரிக்காவில் பரபரப்பு!

US President Biden Son: அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டரை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Biden Son: போதை பொருளுக்கு அடிமையாக இருந்தபோது துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோத போதை பொருளுக்கு அடிமையாக இருந்த சமயத்தில் கை துப்பாக்கியை வைத்திருந்ததாக அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக மூன்று குற்ற வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் டெலாவேர் ஃபெடரல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

துப்பாக்கியை விற்றது தொடர்பான விவகாரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது, துப்பாக்கியை வாங்கும் போது நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்தது, போதை பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கை துப்பாக்கியை வைத்திருந்தது என 3 புகாரில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, டெலாவேரில் உள்ள துப்பாக்கி விற்கும் கடையில் கோல்ட் கோப்ரா கைத்துப்பாக்கியை வாங்கியதாக ஹண்டர் பைடன் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில், சட்டவிரோத போதை பொருளை அவர் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கியை வாங்க வேண்டுமானால் சரியான தகவல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். இந்த விண்ணப்பத்தில் பைடனின் மகன் தவறான தகவல்களை பூர்த்தி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

அமெரிக்க அதிபராக உள்ள ஒருவரின் மகன்/மகள் குற்ற வழக்கில் சிக்குவது இதுவே முதல்முறை. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் (பைடனின் மனைவி), ஹண்டர் பைடனின் அத்தை வலேரி பிடன் ஓவன்ஸ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

தீர்ப்பு வாசிக்கப்படும் போது ஹண்டர் பைடனின் மனைவி மெலிசா கோஹன் பைடன் நீதிமன்ற அறையில்தான் இருந்தார். மூன்று மணி நேர விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு தரப்பு வாதமும் நேற்று நிறைவடைந்தது.

தண்டனை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி மேரிலென் நோரிகா அறிவித்துள்ளார். இந்த வழக்கில் தனது மகன் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அதிபர் பைடன் முன்னதாகவே அறிவித்துவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalaignar Kanavu Illam: ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும்
ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் "தல"... தோனியின் செல்ல பெயர் கொண்டு ரொனால்டோவுக்கு ஃபிபா மரியாதை!
Breaking News LIVE: நாளை ராகுல் காந்தி பிறந்தநாள் : கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த செல்வபெருந்தகை
Breaking News LIVE: நாளை ராகுல் காந்தி பிறந்தநாள் : கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த செல்வபெருந்தகை
Vinayak Chandrasekaran : 'குட் நைட்' படம் தந்த 'குட் லைஃப்'.. இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நெகிழ்ச்சி !
Vinayak Chandrasekaran : 'குட் நைட்' படம் தந்த 'குட் லைஃப்'.. இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நெகிழ்ச்சி !
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Senji Masthan  : எனக்கே ஸ்கெட்ச்சா?எகிறி அடித்த மஸ்தான்! அச்சத்தில் பொன்முடி?Roja Scam in Aadudam Andhra : ’’100 கோடி மோசடி’’ரோஜா மீது புகார்!ஆந்திராவில் பரபரப்புNEET UG exam result issue  : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை! காரணம் என்ன?Olympic Games Paris 2024 : பாரீஸ் ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தகுதி! போடு வெடிய..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalaignar Kanavu Illam: ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும்
ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் "தல"... தோனியின் செல்ல பெயர் கொண்டு ரொனால்டோவுக்கு ஃபிபா மரியாதை!
Breaking News LIVE: நாளை ராகுல் காந்தி பிறந்தநாள் : கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த செல்வபெருந்தகை
Breaking News LIVE: நாளை ராகுல் காந்தி பிறந்தநாள் : கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த செல்வபெருந்தகை
Vinayak Chandrasekaran : 'குட் நைட்' படம் தந்த 'குட் லைஃப்'.. இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நெகிழ்ச்சி !
Vinayak Chandrasekaran : 'குட் நைட்' படம் தந்த 'குட் லைஃப்'.. இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நெகிழ்ச்சி !
IND vs AFG T20 World Cup 2024: சூப்பர் 8ல் மோதும் இந்தியா - ஆப்கானிஸ்தான்.. இதுவரை அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் யார் யார்?
சூப்பர் 8ல் மோதும் இந்தியா - ஆப்கானிஸ்தான்.. இதுவரை அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் யார் யார்?
Alka Yagnik : ஹெட்ஃபோன்ஸில் சத்தமாக பாட்டு கேட்பவரா  நீங்கள்...உணர்திறன் நரம்பு பாதிப்பு என்றால் தெரியுமா?
Alka Yagnik : ஹெட்ஃபோன்ஸில் சத்தமாக பாட்டு கேட்பவரா நீங்கள்...உணர்திறன் நரம்பு பாதிப்பு என்றால் தெரியுமா?
Paris Olympics 2024: போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
போடு வெடிய..! பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி..!
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Group 4 Answer Key 2024: டிஎன்பிஸ்சி குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு; பார்ப்பது எப்படி?
Embed widget