மேலும் அறிய

வானில் பறந்த மர்ம பொருள்...ஏலியன்கள் வேலையா? அமெரிக்க விமானப்படை தளபதி பரபரப்பு பதில்

மர்மபொருட்கள் விமானத்தை ஓட்டவில்லை என்றாலும் இந்த பொருட்கள் எப்படி பறந்தன? அவை எந்த நாட்டிற்கு சொந்தமானது? ஏலியன் விமானமா? இது ஆபத்து விளைவிக்குமா? என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

கடந்த ஒரு வார காலமாக, சீன உளவு பலூன் விவகாரம் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன உளவு பலூன் என சொல்லப்பட்டு வந்த ஒன்றை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதில் இருந்தே அமெரிக்க, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.

பறக்கும் மர்மபொருள்:

சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆறே நாள்களில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வானில் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த மர்ம பொருளையும் அமெரிக்க ஜெட் விமானங்கள் நேற்று முன் தினம் சுட்டு வீழ்த்தியது.

இதை தொடர்ந்து, கனடா வான்பரப்பில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே, சீன வான்பரப்பில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம பொருள் காணப்பட்டது.

ஏலியன்களுக்கு தொடர்பா?

வடக்கு அமெரிக்காவின் வான்வெளி பரப்பில் கடந்த 2 வாரங்களில் மூன்று முறை அத்துமீறல்கள் நடைபெற்று உள்ளன. இதனால் அந்த பிராந்தியத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பறந்த இந்த பொருட்கள் விமானத்தை ஓட்டி இல்லை என்றாலும் அந்த பொருட்கள் எப்படி பறந்தன? அவை எந்த நாட்டிற்கு சொந்தமானது? ஏலியன் விமானமா? எதற்காக பறந்தது? மக்களுக்கு இது ஆபத்து விளைவிக்குமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரத்திற்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு இருப்பதாக எழுப்பப்படும் சந்தேகங்களை ஒட்டு மொத்தமாக மறுத்துவிட முடியாது என அமெரிக்க விமானப்படை ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய ஜெனரல் க்ளென் வான்ஹெர்க், "இது தொடர்பான விசாரணையை புலனாய்வு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளிடம் விட்டுவிடுகிறேன். நான் எதையும் மறுத்துவிடவில்லை. இந்த கட்டத்தில், வட அமெரிக்காவை நெருங்கும் அனைத்து அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து ஆய்வு செய்வோம். அது என்ன பிரச்னை என்பதை கண்டறிய முயற்சி மேற்கொள்வோம்" என்றார்.

கனடா, அமெரிக்கா கூட்டு முயற்சி:

அமெரிக்கா சுட்டு வீழ்த்திய மர்ம பொருள்கள் ஏலியன்களுடையது என்ற கருத்தை மறுக்கிறீர்களா என கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஜெனரல் க்ளென்தான், வட அமெரிக்க வான்பரப்பை கண்காணித்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உத்தரவின் பேரில் அமெரிக்க போர் விமானம் ஒன்று, அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது.

இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ”கனடா வான்வெளியில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத ஒரு பொருளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன். கனடா  மற்றும் அமெரிக்க விமானங்கள் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டன.

அப்போது, அமெரிக்காவின் F-22 விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் உடன் தொலைபேசி மூலமாக பேசினேன். சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருளின் பாகங்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்யும் பணிகளை, கனடா மேற்கொள்ளும். வட அமெரிக்கா பிராந்தியத்தை கண்காணிப்பதற்காக அமெரிக்க படைகளுக்கு நன்றி” என்றார். 

தலைப்பு செய்திகள்

Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Embed widget