மேலும் அறிய

Spelling Bee | ஸ்பெல்லிங் பீ போட்டியில் வென்றார் ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுமி..! மூன்று கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்..!

அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியை ஆப்பிரிக்க - அமெரிக்க சிறுமி ஒருவர் முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் பள்ளி குழந்தைகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நடத்தப்பட்டு வரும் போட்டி ‘ஸ்பெல்லிங் பீ’. 2008ஆம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அமெரிக்க குழந்தைகள்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர். 2020-ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்தப் போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில் முதல் முறையாக ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் 12 ஆண்டுகளாக இந்திய அமெரிக்க குழந்தைகள் இந்தப் போட்டியில் செலுத்தி வந்த ஆதிக்கத்தை உடைத்தார். 

ஏனென்றால், கடைசியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 8 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதில் எழு பேர் இந்திய அமெரிக்க குழந்தைகளாக இருந்தது கூடுதல் சிறப்பாக அமைந்தது. இந்தாண்டும் இந்தப் போட்டிக்கு 209 பேர் இறுதிக்கு தேர்வாகி இருந்தனர். அதிலும் இந்திய அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளே அதிகம் தேர்வாகி இருந்தனார். 

Spelling Bee | ஸ்பெல்லிங் பீ போட்டியில் வென்றார் ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுமி..! மூன்று கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்..!

இந்தச் சூழலில் அவர்களில் ஒருவரே மீண்டும் இந்தப் போட்டியை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை தவறாக்கும்படி 14 வயது ஸெய்லா அவண்ட் சிறப்பாக ஸ்பெல்லிங் சொல்லி முதல் பரிசை தட்டிச் சென்றார். அத்துடன் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தையும் பரிசாகவும் வென்றார். இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற இவர் 11 பேருடன் போட்டியிட்டார். அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றார். 

இந்த வெற்றி குறித்து ஸெயிலா, “நான் ஸ்பெல்லிங் போட்டிகளில் பங்கேற்க தொடங்கி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்கு இப்படி ஒரு பெரிய போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.தினமும் 13 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் ஸ்பெல்லிங் கூறி பயிற்சி எடுப்பேன். ஒருநாளைக்கு 7 மணிநேரம் இந்தப் போட்டிக்கு தயாராக செலவிடுவேன். என்னுடைய வெற்றியை பார்த்து மேலும் பல ஆப்பிரிக்க- அமெரிக்க குழந்தைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக உள்ளது”  எனக் கூறினார். 

ஸெய்லா அவண்ட் ஒரு சிறப்பான கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வருகிறார். அதிக கூடைப்பந்துகளை ட்ரிப்பிளிங் செய்த வீராங்கனை என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். அதேபோல் கூடைப்பந்து விளையாட்டில் மேலும் 2 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். 93 ஆண்டு கால அமெரிக்க ஸ்பெல்லிங் பீ வரலாற்றில் சாம்பியன் படத்தை வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க குழந்தை என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் ஸ்பெல்லிங் பீ போட்டியை வெல்லும் இரண்டாவது கருப்பின குழந்தை என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த அன் மேக்ஸ்வேல் 1998-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தார். 

மேலும் படிக்க: 'அடேங்கப்பா 196 அடி ஆழமா.. நீ பாத்த' - பாக்காதவங்க, இந்த வீடியோவைப் பாருங்க..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget