Kabul Bomb Blast : காபூலை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு...! ஆப்கானிஸ்தானில் தொடரும் பதற்றம்...!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசீர் அக்பர் கான் பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டுள்ளது. இதை அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிஸ்முலா ஹபீப் உறுதி செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசீர் அக்பர்கான் பகுதியில் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிஸ்முலா ஹபீப் உறுதி செய்துள்ளார்.
ஒரு காலத்தில் , பல வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நேட்டோ படைகளின் தளமாக விளங்கிய தலைநகர் காபூலின் அருகில் குண்டு வெடித்துள்ளது. இந்த பகுதி, தற்போது ஆளும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
An explosion was heard in the vicinity of Wazir Muhammad Akbar Khan Grand Mosque in Kabul, reports Afghanistan's TOLOnews
— ANI (@ANI) September 23, 2022
மசூதியில் தொழுகை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் போது தலைநகரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக TOLOnews செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றி இதுவரை எந்த தகவல் தெரியவில்லை.
சமீப காலமாகவே வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மசூதிகளில் குண்டுவெடிப்புகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. அவற்றில் சில குண்டு வெடிப்புகளை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
There are reports of bomb blast in front of a mosque in Wazir Akbar Khan area, Kabul city. #Kabul
— Rifatullah Orakzai (@RifatOrakzai) September 23, 2022
நேற்று காபூலில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரன் கூறுகையில், "நகரின் மேற்கு டெஹ்மசாங் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு உணவகத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அப்பகுதிக்கு ஒரு குழு சென்றுள்ளது.
#Breaking A motor bomb blast in green zone-Wazir Akbar Khan- so far killed and wounded 25 worshipers, security source confirmed.
— Najib Lalzoy (@LalzoyNajib) September 23, 2022
This is the most protected area of Kabul. pic.twitter.com/2qyhlRgPOB
இந்த குண்டுவெடிப்பு விபத்தா அல்லது தாக்குதலால் ஏற்பட்டதா என போலீசார் தெரிவிக்கவில்லை. ஆப்கானிய நகரங்கள் சில சமயங்களில் உள்ளூர் ஐஎஸ் குழுவின் இலக்காக மாறியுள்ளது.