Kabul Blast: ஆப்கானிஸ்தானில் பள்ளிகளில் குண்டுவெடிப்பு - 6 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
பள்ளியிலிருந்து மாணவர்கள் தங்கள் காலை வகுப்புகளை முடித்து வெளியே வந்து கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் 3 பள்ளிகளில் குண்டுவெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலில் உள்ள 3 பள்ளிகளில் இன்று நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் கூறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
#BREAKING Blasts at school in Afghan capital killed six, wounded 11: police pic.twitter.com/jecgEZwanj
— AFP News Agency (@AFP) April 19, 2022
அப்துல் ரஹீம் ஷாஹித் பள்ளியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பள்ளியிலிருந்து மாணவர்கள் தங்கள் காலை வகுப்புகளை முடித்து வெளியே வந்து கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
நகரின் தாஷ்ட்-இ-பார்ச்சி சுற்றுப்புறத்தில் உள்ள அப்துல் ரஹீம் ஷாஹீத் உயர்நிலைப் பள்ளிக்குள் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. மற்றொன்று ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கல்வி மையத்திற்கு அருகில் நடந்துள்ளது. மூன்றாவது குண்டுவெடிப்பு அதே பகுதியில் உள்ள ஒரு ஆங்கில மொழி மையத்தில் நடந்தது.
1,000 மாணவர்கள் வரை தங்கக்கூடிய பரந்த வளாகத்திற்குள் தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார். வெடிவிபத்தின் போது பள்ளி கட்டிடத்தில் இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் அனைத்து பெண்களையும் பள்ளிக்கு அனுமதிப்பதாக உறுதியளித்த பின்னர், பள்ளி மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு வரை மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்