வேற்றுக் கிரகவாசியை கண்டுபிடித்த சீனா? கிடைத்த புதிய சிக்னல்! திடீரென செய்தி டெலிட்!
சீனாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியில் வேற்று கிரகவாசிகள் குறித்து கண்டறிந்துள்ளதாக சீன அரசின் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லி இதழில் தகவல் வெளியிடப்பட்டது
உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஸ்கை ஐ சீனாவில் இருக்கிறது. இந்நிலையில், வழக்கமான ரேடியோ சிக்னல்களை விட, தற்போது கண்டறியப்பட்டுள்ள ரேடியோ சிக்னல்கள் வித்தியாசமாக இருப்பதாகவும், அதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகம், சீன அறிவியல் மன்றத்தின் தேசிய வானியல் கண்காணிப்பகம், அமெரிக்காவின் பெர்க்லி பகுதியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வேற்றுகிரகக் கலாச்சாரத் தேடல் குழுவைச் சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஷாங்க் டோஞ்சி இதனை ஆய்வு செய்து வருகிறார்.
`இந்த சிக்னல்கள் ரேடியோ பாதிப்பினால் கூட ஏற்பட்டிருக்கலாம்.. இது கூடுதல் விசாரணையைக் கோருகிறது’ எனக் கூறியுள்ளார் ஷாங்க் டோஞ்சி.
இந்த செய்தியை சீனாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிடும் அதிகாரப்பூர்வ சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லி இதழில் இருந்து நீக்கியதன் காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், சீனாவின் சமூக வலைத்தளங்களான வெய்போ முதல் அரசு நடத்தும் சமூக ஊடகங்கள் வரை இந்த விவகாரம் வைரலாகி, ட்ரெண்டிங் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் சீனாவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் குய்ஷோ மாகாணத்தில் ஸ்கை ஐ என்ற ரேடியோ தொலைநோக்கி அமைக்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தொலைநோக்கி வேற்று கிரகவாசிகளைத் தேடுவதற்காக பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. கடந்த 2020ஆம் ஆண்டிலும் இதே போன்ற சிக்னல்கள் கிடைத்ததாக ஷாங்க் டோஞ்சி கூறியுள்ளார்.
A suspicious radio signal with possible technological traces of civilizations beyond Earth was picked up Tuesday by #China’s “Sky Eye,” the world’s largest single-dish radio telescope. The team needs further research to confirm or rule out this presumption.#skyeye #Cosmo pic.twitter.com/TCyOEuBAe0
— Panda Paws (@Panda_Paws_) June 14, 2022
சீனாவின் ஸ்கை ஐ ரேடியோ தொலைநோக்கி மிகவும் குறைந்த அலைவரிசைகளையும் உணரும் திறன் கொண்டதாகவும், வேற்று கிரகவாசிகளைக் கண்டுபிடிப்பதில் இந்தத் தொலைநோக்கி மிக முக்கிய பங்கு வகிக்கும் எனவும் ஷாங்க் டோஞ்சி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்