உக்ரைன் வானில் தோன்றிய திடீர் 'ஃபிளாஷ்' - தாக்குதல் எச்சரிக்கையால் பீதி அடைந்த மக்கள்! உண்மையை கூறிய நாசா!
செயலிழந்த 660-பவுண்டு (300-கிலோகிராம்) செயற்கைக்கோள் புதன்கிழமை சிறிது நேரம் வளிமண்டலத்தில் நுழைந்து சாம்பலகும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
புதன்கிழமை உக்ரைன் தலைநகருக்கு மேல், வானத்தில் ஒரு பெரிய வெளிச்சம் ஏற்பட்டதை அடுத்து, வான்வழித் தாக்குதல் நடக்கும் என்ற பதட்டம் நிலவி வந்தது. பின்னர் நாசா செயற்கைக்கோள் வளிமண்டலத்தில் நுழைந்ததால் ஏற்பட்ட ஃபிளாஷ் என்று நகர அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ஏற்கனவே அறிவித்திருந்த நாசா
"முதற்கட்ட தகவல்களின்படி, இந்த நிகழ்வு நாசா விண்வெளி செயற்கைக்கோள் பூமியில் விழுந்ததன் விளைவாகும்" என்று கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஜி பாப்கோ டெலிகிராமில் தெரிவித்தார். செயலிழந்த 660-பவுண்டு (300-கிலோகிராம்) செயற்கைக்கோள் புதன்கிழமை சிறிது நேரம் வளிமண்டலத்தில் நுழைந்து சாம்பலகும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
2018இல் செயல் இழந்தது
சூரிய எரிப்புகளை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் RHESSI விண்கலம், 2002 இல் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டு 2018 இல் செயலிழக்கச் செய்யப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. இரவு 10:00 மணியளவில் (1900 GMT) கியேவ் மீது வானில் ஒரு "பிரகாசமான ஃபிளாஷ்" காணப்பட்டதாக பாப்கோ கூறினார்.
உக்ரைனில் பதற்ற சூழ்நிலை
ஆனால் அந்த ஃபிளாஷ் வந்த ஒரு சில மணி நேரத்தில், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை செயல்படுத்தப்பட்டது. ஆனால் "வான் பாதுகாப்பு செயல்பாட்டில் இல்லை" என்று பாப்கோ கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, உக்ரேனிய விமானப்படையும் தோன்றிய ஃபிளாஷ் 'செயற்கைக்கோள்/விண்கல்' வீழ்ச்சியுடன் தொடர்புடையது" என்று விளக்கம் அளித்து பதற்றத்தை தனித்தது.
Something happened in Kyiv sky tonight. The whole city is at a loss, what it was. UFO? pic.twitter.com/DAic7QHae2
— olexander scherba🇺🇦 (@olex_scherba) April 19, 2023
வெளியான மீம்ஸ்கள்
பல தொலைக்காட்சி சேனல்கள் க்ய்வ் மீது வானத்தில் ஃப்ளாஷ் ஒளிர்வதைக் காட்டும் வீடியோக்களை வெளியிட்ட பின், உக்ரேனிய சமூக ஊடகங்களில், ஊகங்களும், மீம்களும் ஏராளமாக வெளியாகி வந்தன. "மீம்ஸ்களால் சமூக வலைதளங்கள் மகிழ்ந்தாலும்... தயவு செய்து விமானப்படையின் அதிகாரப்பூர்வ சின்னத்தை பயன்படுத்தி மீம்ஸ்களை உருவாக்காதீர்கள்!" என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
திங்களன்று ஒரு அறிக்கையில், நாசா வளிமண்டலத்தில் நுழையும் போது ருவென் ராமட்டி ஹை எனர்ஜி சோலார் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் இமேஜர் விண்கலத்தின் பெரும்பகுதி எரிந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியிருந்தது. "ஆனால் அதன் உடைந்த சில பகுதிகள் மீண்டும் உள்ளே நுழையும்போது மீண்டும் இதுபோன்ற விஷயங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று நாசா கூறியது. ஆனால் இது பூமியில் உள்ள எவருக்கும் தீங்கு விளைவிக்காது என்று கூறியிருந்தது.