Argentina Earthquake: அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.5 ஆக பதிவு.. என்ன பாதிப்புகள்..?
அர்ஜென்டினாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அர்ஜென்டினாவின் கார்டோபாவிலிருந்து வடக்கே 517 கிமீ தொலைவில் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நேற்று (உள்ளூர் நேரம்) அதிகாலை 3:39 மணியளவில் அர்ஜென்டினாவின் கார்டோபாவிலிருந்து வடக்கே 517 கிமீ தொலைவில் ஏற்பட்டது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:6.5, Occurred on 21-01-2023, 03:39:37 IST, Lat: -26.82 & Long: -63.36, Depth: 586 Km ,Location: 517km N of Cardoba, Argentina for more information Download the BhooKamp App https://t.co/fZbW3Lj3oY@Dr_Mishra1966 @Ravi_MoES @ndmaindia @Indiametdept pic.twitter.com/v2D4OiJ8uo
— National Center for Seismology (@NCS_Earthquake) January 20, 2023
இந்த நிலநடுக்கம் அர்ஜென்டினாவின் சாண்டியாகோ டெல் எஸ்டெரோ மாகாணத்தில் உள்ள மான்டே கியூமாடோவில் இருந்து 104 கி.மீ. மேலும் இது 600 கிலோமீட்டர் (372.82 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் பராகுவே மற்றும் அர்ஜென்டினாவில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு பலி அல்லது சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
The M6.8 earthquake in Argentina occurred at a great depth of 610 km—noted by the largest red circle in these images. Here, the Nazca Plate subducts under the South American Plate, and earthquakes increase in depth from west to east.https://t.co/OM7bvJKw7W pic.twitter.com/fzj1I1zzQj
— EarthScope Consortium (@EarthScope_sci) January 20, 2023
நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும்போது, தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இதனை டெக்டோனிக் தட்டுகள் என்று கூறலாம். அதிர்வுகள் 3 ரிக்டருக்கும் குறைவாக இருந்தால் நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். லேசான நிலநடுக்கம் ஏற்படும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பதிவாகியிருந்தால் அது பூமியில் பலத்த சேதம் மற்றும் சுனாமியை ஏற்படுத்தும்.
டெக்டோனிக் தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகரும் போது அவை உராய்வு காரணமாக அவற்றின் விளிம்புகளில் சிக்கிக்கொள்ளும். விளிம்பில் உள்ள அழுத்தம் உராய்வைக் கடக்கும்போது, அது பூகம்பத்தை விளைவிக்கும். அத்தகைய எதிர்வினை அலைகளின் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகிறது. இது இறுதியில் பூமியின் மேற்பரப்பான நிலப்பரப்பை உலுக்குகிறது. இந்த பூகம்பம் சம அளவிலான ஒரே மூலத்தால் உருவாக்கப்பட்டு பூமிக்குள்ளேயே அல்லது அதன் மேற்பரப்பில் பரப்பப்படுவதால் அவை நில அதிர்வு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
Guinness Spoon : உலகின் மிக சிறிய ஸ்பூனை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்..