Rapper Coolio : பாத்ரூம் தரையில் உடல்.. 90-ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ராப் பாடகர் கூலியோ மறைவு.. என்ன நடந்தது
கூலியோ அவருடைய பாடலுக்காக 1996 இல் கிராமி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னமும் அவரது பாடல்கள் யூட்யூப் போன்ற தளங்களில் பதிவேற்றப்பட்டு பெருமளவில் பார்வையாளர்களை குவித்து வருகிறது.
"கேங்க்ஸ்டாஸ் பாரடைஸ்" மற்றும் "ஃபென்டாஸ்டிக் வோயேஜ்" போன்ற ஹிட் பாடல்களால் இசை உலகில் ஒளிர்ந்த 90ஸ் கிட்ஸின் விருப்பமான ராப்பரான கூலியோ 59 வயதில் நேற்று(புதன்கிழமை) மறைந்த செய்தி ரசிகர்களை உலுக்கியுள்ளது. பாத்ரூம் தரையில் விழுந்து கிடந்ததை பார்த்த நண்பர்தான் முதலில் மருத்துவமனைக்கு தகவல் அளித்துள்ளார். கூலியோ மரணத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை
கூலியோ மறைவு
புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் நேரத்தில் கூலியோ இறந்துவிட்டதாக அவருடைய நண்பரும் மேலாளரும் ஆன போஸி தகவல் தெரிவித்துள்ளார். கூலியோ கலிபோர்னியாவின் காம்ப்டனில் வளர்ந்தார் என்று அறியப்படுகிறது. 1994 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிடம் பேசுகையில், அவர் போதைப்பொருளுக்கு அடிமையானதை நினைவு கூர்ந்தார். அதன்பிறகு தீயணைப்பு வீரராக தொழிலைத் தொடர்ந்து அதன் மூலம் தன்னை போதைப்பொருளின் பிடியில் இருந்து வெளியேற்றிக்கொண்டதாக கூறினார். "நான் ஒரு வேலையை தேடவில்லை, அதன் மூலம் போதைப்பொருளிலிருந்து தப்பிக்க ஒரு வழியை தேடினேன். இது என்னைக் கண்டிப்பாக கொல்லப் போகிறது, நான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எனக்குத் தெரிந்தது. தீயணைப்புப் பயிற்சியில் எனக்கு ஒழுக்கம் தேவைப்பட்டது. நாங்கள் ஒவ்வொரு நாளும் ஓட வேண்டி வரும். அப்போது நான் குடிப்பதில்லை, புகைபிடிக்கவில்லை, அதுமட்டுமில்லை நான் வழக்கமாகச் செய்யும் விஷயங்களைக் கூடச் செய்யவில்லை." என்று அப்போது கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரபலப்படுத்திய பாடல்கள்
இவரது ராப் வாழ்க்கை 80 களில் தொடங்கியது. "ஃபென்டாஸ்டிக் வோயேஜ்" தான் அவரை பிரபலமாக்கிய வைத்த முதல் பாடல். அவரது மிகப்பெரிய ஹிட் பாடலான "கேங்க்ஸ்டாஸ் பாரடைஸ்", "டேஞ்சரஸ் மைண்ட்ஸ்" திரைப்படத்தில் இடம்பெற்ற பிறகு அவரது நட்சத்திர அந்தஸ்து பிரம்மாண்டமாக உயர்ந்தது. கூலியோ அவருடைய பாடலுக்காக 1996 இல் கிராமி விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னமும் அவரது பாடல்கள் யூட்யூப் போன்ற தளங்களில் பதிவேற்றப்பட்டு பெருமளவில் பார்வையாளர்களை குவித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்: பவர் தெரியாம விளையாடிட்டு இருக்கீங்க...ஊடகத்தினரை எச்சரிக்கும் TTF வாசன்
காலத்தை கடந்து நிற்கும் பாடல்கள்
அவர் பாடல்களை குறித்து பார்த்தோமானால், "தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. நான் எந்த நவநாகரீகமான வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை... அதுதான் அதனை காலங்கள் தாண்டியும் நிற்கும் பாடலாக மாற்றியது என்று நினைக்கிறேன்." என இசை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அவரது வாழ்க்கையில், கூலியோ 17 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்பட்ட கேசட்கள் விற்றுள்ளார் என்று அவரது வலைத்தளம் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் கூலியோ
பிரபலமான நிக்கலோடியோன் தொலைக்காட்சித் தொடரான "கெனன் அண்ட் கெல்" தீம் ம்யூசிக்கிற்காகவும், "டெக்ஸ்டர்'ஸ் லேபரேட்டரி: தி ஹிப்-ஹாப் எக்ஸ்பெரிமென்ட்" ஆல்பத்தில் அவரது பங்களிப்புக்காகவும் 90ஸ் கிட்ஸின் இதயங்களில் கூலியோ தவிற்கமுடியாத இடத்தைப் பெற்றார். இது கார்ட்டூன் நெட்வொர்க் அனிமேஷன் தொடரால் ஈர்க்கப்பட்ட பல்வேறு ஹிப்-ஹாப் கலைஞர்களால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஆண்டுகளில், கூலியோ, "செலிபிரிட்டி குக் ஆஃப்" மற்றும் "செலிபிரிட்டி சாப்ட்" போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றினார். 2008 இல் ஒளிபரப்பப்பட்ட "கூலியோ'ஸ் ரூல்ஸ்" என்று ஆக்சிஜன் தொலைக்கட்சியில் ஒரு நிகழ்ச்சியையும் அவர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.