Pakisthan Police Shot Dead: பாகிஸ்தான்: ரோந்து பணிக்கு சென்ற 6 போலீசார் சுட்டு கொலை - திடீரென நடந்த பரபரப்பு சம்பவம்!
பாகிஸ்தானில் ரோந்து பணிக்கு சென்ற 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் ரோந்து பணிக்கு சென்ற 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள ஜாபராபாத் பகுதியில் சமீப காலமாக வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசாருக்கு அங்கு இருக்கும் மக்கள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் பெறப்பட்ட பின் போலீசார் அங்கு ரோந்து பணிகள் மேற்கொண்டு வந்தனர்.
ரோந்து பணியின் போது ஜாபராபாத் பகுதியில் சந்தேக்கதிற்கு உரிய நபர்கள் சிலர் அங்கு சுற்றி திறிந்து வந்ததை காவல் துறையினர் கண்டுப்பிடித்தனர். அந்த நபர்களை உடனடியாக காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது முன்னுக்கு பின் முறனாக பதிலளித்தனர். இதனால காவல் துறையினருக்கும் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுத் தள்ளினர்.
துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 காவல் துறையினர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஏரளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன், அந்த பகுதி முழுவதும், குறிப்பாக வடமேற்கில் மர்ம நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரானுவம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஜாபராபாத் பகுதி என்பது முன்னாள் பழங்குடியினர் வசித்த பகுதியாகும். மேலும் கடந்த 15 ஆண்டுகளாக இஸ்லாமாபாத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியை நடத்திய பாகிஸ்தான் தலிபான், போராளிக் குழுவின் தளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல் பாகிஸ்தானில் லாகூர் நோக்கிச் சென்ற ரயிலின் எக்ஸிகியூட்டிவ் கோச்சில் கடந்த புதன்கிழமை மாலையில் தீ விபத்து ஏற்பட்ட, சம்பவத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ள சோகம் அந்நாட்டையே உலுக்கியது. பாகிஸ்தானில் அடிக்கடி ரயில் விபத்துகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரயில்வே அமைச்சகம் உயர்மட்ட விசாரணை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
Chennai festival: இன்று முதல் மே 15-ஆம் தேதி வரை சென்னை திருவிழா... என்னெவெல்லாம் ஸ்பெஷல்?
பாகிஸ்தானில் ஒடும் ரயிலில் தீ விபத்து… குழந்தைகள், பெண்கள் உட்பட 7 பேர் பலியான சோகம்!