Mr Beast Ocean CleanUp | 13,600 டன் கடல் குப்பைகள்.. 6 லட்சம் பேரிடமிருந்து 224 கோடி டாலர் நிதி.. மிஸ்டர் பீஸ்ட் சுவாரஸ்யம்
6 லட்சம் பேரிடமிருந்து 224 கோடி டாலர் நிதி மூலம் உலகம் முழுவதும் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் இருந்து 13,600 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.
6 லட்சம் பேரிடமிருந்து 224 கோடி டாலர் நிதி மூலம் உலகம் முழுவதும் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் இருந்து 13,600 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிம்மி டொனால்ட்சன் என்ற நபர் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் முயற்சியைத் தொடங்கினார்.
மிஸ்டர் பீஸ்ட் என்றழைக்கப்படும் அவர், டொமினிக்கன் குடியரசு நாட்டில் உள்ள உலகின் மிகவும் அசுத்தமான கடற்கரையை சுத்தம் செய்தார். அந்தக் கடற்கரையில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட பணியில் 60,000 பவுண்ட் கழிவுகள் அகற்றப்பட்டம்.
இதன் மூலம் இந்த உலகிற்கு தனது இலக்கு என்னவென்பதை அவர் தெரிவித்தார். அதேபோல் தங்களின் தொண்டு நிறுவனத்தின் மூலம் பெற்றப்படும் ஒவ்வொரு டாலரும் எப்படி பிரயோஜனமாக செலவழிக்கபப்டுகிறது என்பதையும் உலகிற்கு உணர்த்தினார்.
மிஸ்டர் பீஸ்ட் தனது தொண்டு நிறுவனம் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், கடற்கரைகளை ஒட்டிய பகுதிகளை சுத்தம் செய்ய நிதியுதவி அளித்து வருகிறார்.
இது தொடர்பாக மிஸ்டர் பீஸ்ட் பகிர்ந்த ட்வீட் ஒன்றில், லூமினார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர் ஆஸ்டின் ரஸ்ஸல் 30 மில்லியன் பவுண்ட் குப்பைகளை அகற்ற 30 மில்லியன் டாலர் நிதியை அளித்து உதவியதாகத் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பான அறிக்கையில், 30,000,000 பவுண்ட் குப்பைகளை அகற்றும் அளவுக்கு நிதியைத் திரட்டியுள்ளோம். இவ்வளவு குப்பையா என நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது.
We did it! Austin Russell noticed we came up a few million pounds short so he got us over 30 million 😂
— MrBeast (@MrBeast) January 2, 2022
Shout out to the over 600,000 different people that donated to TeamSeas and the creator community for being so awesome in supporting this 🥺❤️❤️❤️ #teamseas pic.twitter.com/DBUNQoYAit
மிஸ்டர் பீஸ்டைப் பற்றி இன்னொரு சுவாரஸ்ய தகவலும் உள்ளது. இவர்தான் IRL Sacred Games என்ற விளையாட்டை யூடியூப்பில் வெளியிட்ட பிரபல யூடியூபர். இதன் வாயிலாக இவர் 194 மில்லியன் பார்வைகளை வெறும் 30 நாட்களில் கடந்து உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முயற்சிக்கு டீம் சீஸ் (TeamSeas) என்று மிஸ்டர் பீஸ்ட் பெயரிட்டுள்ளார். 6 லட்சம் பேர் இணைந்து நிதியுதவி அளித்து செயல்படச் செய்த ஒரு முயற்சிக்கு ஆஸ்டின் ரஸ்ஸல் 30 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்து கடற்கரை, நீர்நிலைகள் திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.