திண்டிவனத்தில் பத்திரபதிவு செய்ய 50 ஆயிரம் லஞ்சம் - பொறுப்பு சார் பதிவாளர், ஆவண எழுத்தர் கைது
பத்திர எழுத்தரான சரவணன் மூலமாக சார்பதிவாளர் (பொறுப்பு) சங்கரலிங்கத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் 50 ஆயிரத்தை பிரகாஷ் கொடுத்த போது இருவரும் கையும் களவுமாக சிக்கினர்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் பிரகாஷ் (43). இவர், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயரில் தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்வதற்காக திண்டிவனம் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார்.
Cuddalore: பாழடைந்த வீடு.. காதலன் கண் முன்னே கடலூரில் நடந்த கொடூரம்
Ma Subramanian Speech: வீடு தேடி மருத்துவம் கியூபாவில் கூட கிடையாது.. அமைச்சர் மா.சு மாஸ் பேச்சு
ஆனால் பத்திரப்பதிவு செய்ய அங்கிருந்த அதிகாரி ஒருவர் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்சம் கேட்ட அதிகாரியை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவிய பணத்துடன் பிரகாஷ் நேற்று காலை 11 மணிக்கு திண்டிவனம் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கிருந்த பத்திர எழுத்தரான திண்டிவனம் சேடன்குட்டை தெருவை சேர்ந்த சரவணன் (41) மூலமாக சார்பதிவாளர் (பொறுப்பு) சங்கரலிங்கத்திடம் (59) ரூபாய் 50 ஆயிரத்தை பிரகாஷ் கொடுத்தார்.
Raja Kannappan | அடுத்தடுத்த சர்ச்சைகள்.. ராஜ கண்ணப்பனை மாற்றிய முதல்வர் | MK Stalin | Transport
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பளர் தேவநாதன் தலைமையிலான போலீசார், லஞ்ச பணத்துடன் சங்கரலிங்கத்தையும், சரவணனையும் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 9 நேரத்திற்கு பின் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை: பொதுமக்கள் தங்கள் புகார்களை சென்னை தலைமை அலுவலக போன் எண்கள் 044-22321085, 22310989, 22331090 என்ற எண்களிலும், விழுப்புரம் மாவட்ட அலுவலக போன் எண் 04146-259216 என்ற எண்களின் புகார்களை தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்