விழுப்புரம்: பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
விழுப்புரம்: பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் 20 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
![விழுப்புரம்: பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை Villupuram news teacher molested schoolgirl in Villupuram has been sentenced to 6 years in prison - TNN விழுப்புரம்: பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/08/0bc35da924808bcb3343cb852dbeef661717829172346739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: பள்ளி மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய அரசு பள்ளி மாணவி கடந்த 2019-ஆம் ஆண்டு சிறுமதுரை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8.3.2019 அன்று பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டபோது அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த உளுந்தூர்பேட்டை சரவணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கிருஷ்ணன் அம்மாணவியை தனியாக அழைத்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து அம்மாணவி, தனது பெற்றோரிடம் கூறவே, இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் ஆசிரியர் கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
6 வருட சிறை தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கிருஷ்ணனுக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் இழப்பீடாக 1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)