விழுப்புரத்தில் சாலையோர கடைகளில் ஸ்வெட்டர் அமோகமாக விற்பனை
குறைந்த விலையில் நல்ல தரத்துடன் இருப்பதால் விழுப்புரம் நகர மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

விழுப்புரத்தில் உள்ள சாலையோர கடைகளில் ஸ்வெட்டர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. விழுப்புரத்தில் பருவமழை துவங்கும் நேரத்தில் ஆண்டுதோறும் வடமாநில வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு, ஸ்வெட்டர்கள் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் வருடம் தோறும் நேபால் பகுதி, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விழுப்புரம் காந்திசிலை அருகே சாலையோரத்தில் தற்காலிக கடைகளை துவக்கியுள்ளனர். இவர்கள் நேபால் பகுதி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஸ்வெட்டர், குல்லாய் மற்றும் குழந்தைகளுக்கான உல்லன் ஆடைகள் விற்பனைக்கு கொண்டு வந்து வடகிழக்கு பருவ மழை முடியும் வரை விற்பனை செய்து வருவார்கள்.
ஸ்வெட்டர் ஒன்று சிறியவர்களுக்கு 100 முதல் 200 ரூபாய் வரையும் பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பெரியவர்களுக்கான ஸ்வெட்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் துவங்கி 250, 350, 450, 550 என 650,750 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேரடி விற்பனை செய்துவரும் இவர்களிடம் ஸ்வெட்டர் வாங்குவதில் விழுப்புரம் பகுதி மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறைந்த விலையில் நல்ல தரத்துடன் இருப்பதால் விழுப்புரம் நகர மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை ஸ்வெட்டர் வாங்கி செல்கின்றனர்.
அனைத்து ஆடைகளும் உல்லன் ஆடைகளாக இருப்பதால், நல்ல குவாலிட்டியாக இருக்கிறது என விற்பனையாளர் தெரிவிக்கின்றார். மேலும் விற்பனை குறித்து வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், வருடம்தோறும் விழுப்புரம் மாவட்டத்திற்கு தான் விற்பனைக்காக வருவோம். இந்த வருடமும் வந்து உள்ளோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்றார் போல ஸ்வட்டர்கள் இருக்கிறது. விற்பனையும் சூப்பராக இருக்கிறது என தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

