மேலும் அறிய

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மலட்டாறு சாலை... கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்

விழுப்புரம் அருகே சின்னமடம் - பூவரசன்குப்பம் இடையே மலட்டாறு கரையோரம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை சேதம்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மலட்டாறு கரையோரம் அமைக்கப்பட்ட தார் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் விவசாயிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை அரசு விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மலட்டாறு கரையோரம் அமைக்கப்பட்ட தார் சாலை சேதம்

தமிழ்நாட்டில் அதிக கிராமப்புறங்களை கொண்ட மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. விவசாயமும் அதனை சார்ந்த கால்நடை தொழிலை நம்பியே விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் அருகே மலட்டாறு கரையோரம் அமைக்கப்பட்ட தார் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் விவசாயிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் கிராமங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை நகரப்புறத்துக்கு கொண்டு செல்லவும், மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல சாலைகள் இன்றியமையாததாக உள்ளது. இதனால் குக்கிராமங்களில் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து அது அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இயற்கை பேரிடர் காலங்களில் இந்த சாலைகள் சேதம் அடைவதும், வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளனது.

ஆனால் அதன் பிறகு இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது விவசாயிகள், பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே சின்னமடம் - பூவரசன்குப்பம் இடையே மலட்டாறு கரையோரம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தார் சாலை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது இந்த தார் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சாலையோரம் முறையான தடுப்புகள் அமைக்காததால் இந்த சாலைகள் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகின்றன. இந்த சாலை வழியாக பண்ருட்டி மார்க்கத்திலிருந்து கள்ளிப்பட்டு, வடமம்பலம், சின்னமடம் வழியாக பூவரசன்குப்பம் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கும் மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக மடுகரை உள்ளிட்ட புதுச்சேரி மாநிலங்களுக்கும் செல்ல முடியும்.

அதே போல் எதிர் வழியாக கடலூர், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்தும் எளிதாக செல்லக்கூடிய பிரதான சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தற்போது முற்றிலும் சேதமடைந்துள்ளது. தார் சாலை தற்போது ஒற்றையடி பாதையாக மாறியுள்ளது. மேலும் மலட்டாறு கரையோரம் அமைக்கப்பட்ட சாலை ஒற்றையடி பாதையாக மாறியதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.

மேலும் மழை, வெள்ள காலத்தில் வாகனங்கள் முற்றிலும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுகிறது.  எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் ஆய்வு செய்து முறையாக தார் சாலை அமைத்து அதனை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் அடித்து செல்லாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Embed widget