Villupuram : ஜிஎஸ்டி உடன் அல்வா விற்பனை - ஒன்றிய குழு உறுப்பினர்கள் நூதன போராட்டம்
திண்டிவனம் அருகே ஜிஎஸ்டி உடன் அல்வா விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள்.
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கொடுக்காத நிலையில் அதிகாரிகளைக் கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு ஒன்றிய குழு உறுப்பினர்கள் அல்வா விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமீப காலமாக மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் பணியாற்ற முறையாக வாய்ப்பு வழங்ககப்படுவதில்லை என்று அவ்வபொழுது புகார்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எதிரில் நொளம்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் எழிலரசன் மற்றும் கீழ் கூடலூர் ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு பொதுமக்களுக்கு அல்வா விற்பனை செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அப்பொழுது, அங்கிருந்த பொதுமக்கள் குறைவான விலைக்கு அல்வா கிடைத்ததால் ஆர்வமுடன் கிலோ கணக்கில் வாங்கி சென்றனர். போராட்டத்திற்க்காக ஒன்றிய குழு உறுப்பினர்களால் எடுத்துவரப்பட்ட அல்வா சிறிய நேரத்தில் காலியானது. பின்பு ஒன்றிய குழு உறுப்பினர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பணியாற்ற வாய்ப்புக் கொடுக்காததை நினைவுபடுத்தும் வகையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அல்வா விற்பனையில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்