Villupuram: ‘மகளிரால் தான் திமுக கட்சியே அழிகிறது’; மகளிர் திட்ட அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்
விழுப்புரம் ; மகளிரால் தான் திமுக கட்சியே அழிகிறது...மகளிர் திட்ட அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்
விழுப்புரம்: மகளிரால் தான் திமுக கட்சியே அழிகிறது என்றும், எதுவும் செய்யக்கூடாது என திமுகவினருக்கு முதல்வரின் கட்டைளையினால் தான் அரசு ஊழியர்கள் ஆடிக்கொண்டிருப்பதாகவும் தகாத வார்தைகளை கூறி கோலியனூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய திமுக ஊராட்சி மன்ற தலைவரின் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த பணியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஆட்களை நியமிக்க அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் விழுப்புரம் அடுத்த கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தாங்கள் சொல்லும் நபர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என கூறி மேல்பாதி கிராமத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் மணிவேல் அடியாட்களுடன் சென்று கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அலுவலகத்தில் புகுந்த கோலியனூர் வட்டாரா மேலாளர் காயத்ரி மற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
திமுக ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டல் விடுக்கும் வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோலியனூர் வட்டார மேலாளர் காயத்ரி வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு அலுவலகத்தில் திமுக ஊரட்சி மன்ற தலைவர் புகுந்து அங்கு பணியியின் இருந்த பெண் ஊழியர்களிடம் மகளிரால் தான் திமுக கட்சியே அழிகிறது எதுவும் செய்யக்கூடாது என திமுகவினருக்கு முதல்வரின் கட்டைளையினால் தான் அரசு ஊழியர்கள் ஆடிக்கொண்டிருப்பதாக கூறும் வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்