2026-ல் தனித்தேர்வாக ITI பயிற்சி! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! மிஸ் பண்ணிடாதீங்க
ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ஆல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணபிக்கலாம்

விழுப்புரம்: 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ஆல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT ஆல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 04.11.2025 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 05.11.2025 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தனித்தேர்வராக தேர்வு எழுத 22.09.2025 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2025. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு .,
உதவி இயக்குநர், மண்டல மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் தொலைபேசி: 04146-294989, பயிற்சி இணை இயக்குநர், விழுப்புரம் தொலைபேசி : 04146-290673 க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கைவினைஞர் பயிற்சித் திட்டம்
இந்தத் திட்டம் 1950களில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் நோக்கம் தொழிற்சாலைகளுக்கு அரைத் திறன் கொண்ட தொழிலாளர்களை வழங்குவதாகும். இந்தத் திட்டம் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த உதவுகிறது.
கைவினைஞர் பயிற்சி, தொழில்துறைக்கு திறமையான மனிதவளத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் பொருளாதாரம் முக்கியமாக அதன் தொழில்துறை உற்பத்தியைச் சுற்றியே உள்ளது. தொழில்துறைக்கு அதன் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு திறமையான மனிதவளம் தேவை. பயிற்சி வெற்றிகரமாக முடிந்த பிறகு, தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (NSQF) நிலை சான்றிதழ் தேசிய தொழில் பயிற்சி கவுன்சிலால் (NCVT) வழங்கப்படுகிறது.





















