மேலும் அறிய

விழுப்புரத்தில் பரபரப்பு ....பூட்டை உடைத்து வள்ளலார் மடத்தை கைப்பற்றிய இந்து சமய அறநிலையத்துறை

விழுப்புரத்தில் உள்ள வள்ளலார் மடத்தினை பூட்டை உடைத்து இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்: நீதிமன்ற உத்தரவுபடி விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வள்ளலார் மடத்தின் பூட்டினை உடைத்து இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையில் முறைகேடு நடைபெறுவதாக சீனுவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை விழுப்புரம் மண்டல இணை ஆணையர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.  அந்த உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டலம் இணை ஆணையர் சிவக்குமார் விசாரணை செய்ததில் கணக்கு வழக்குகள் சரியாக பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து விழுப்புரம் மண்டலம் இணை ஆணையர் சிவக்குமார் விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளையை இந்து சமய நிலைத்துறை கீழ் கொண்டு வருவதாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் வழங்கி கையகப்படுத்துவதாக அறிவித்தனர். அதன்படி இன்று இந்து சமய  அறநிலைத்துறை அதிகாரிகள் அறக்கட்டளை கைப்பற்ற சென்றபோது மடத்தினை பூட்டி சாவியை தராததால் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதினா தலைமையிலான  அதிகாரிகள் பூட்டினை உடைத்து இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டு வந்தனர். போலீசாரின் பாதுகாப்போடு மடத்தின் பூட்டினை உடைத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget